tamilnadu

img

உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சையளித்து கண்காணித்து வரும் வனத்துறை

உடல்நிலை பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சையளித்து கண்காணித்து வரும் வனத்துறை

மேட்டுப்பாளையம், ஆக.26- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகு தியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு நிற் கும் ஆண் காட்டு யானைக்கு வனத் துறையின் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்து கண்காணித்து வரு கின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள சிறுமுகை சர கம், மோதூர் பெத்திக்குட்டை காப்பு காட்டுக்குட்பட்ட எல்லைப் பகுதியில் ஆண் காட்டு யானையொன்று சோர்வு டன் நிற்பதாக சிறுமுகை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.. இதனையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமார்  தலைமையில் சென்ற வனத்துறையி னர் புதர் காட்டுக்குள் நின்றிருந்த யானையை கண்காணித்தனர். யானை யின் உடலில் எங்கும் காயங்கள் இல்லை என்பதோடு அவ்வப்போது அருகில் கிடைக்கும் தீவனம் மற்றும் ஓடை நீரை பருகுவதும் ஆனால் வேறு இடத்திற்கு நகராமல் சோர்வுடன் நிற் பதையும் கண்டனர். இது குறித்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் உயர் அதிகாரிக ளின் ஆலோசனைப்படி யானையின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு  ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படை யில் வன மருத்துவ குழுவினருடன் இணைந்து முதல் சிகிச்சையாக யானைக்கு தர்பூசணி மற்றும் வாழைப் பழம் மூலமாக ஆன்ட்டிபயாடிக் மாத் திரைகள், வலி நிவாரணி மாத்திரை கள், குடற்புழு மாத்திரைகள் மற்றும்  கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவை பழங்கள் மூலமாக  கொடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் வனப்பணியாளர்கள் மற் றும் மருத்துவக் குழுவினரால் யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது.