tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

காட்டெருமையின் காலில் சிக்கிய பாத்திரத்தை அகற்றிய வனத்துறை

உதகை, ஜூலை 10- காலில் எவர் சில்வர் பாத்திரம் சிக்கிகொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பாத்திரத்தை அகற்றி னர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட் டங்களில் நாள்தோறும் கூட்டம் கூட்டமாக காட்டுமாடு கள் சுற்றிதிரிகின்றன. இந்நிலையில், கோத்தகிரி காம் பாய் கடை பகுதியில் வலது பின்னங்காலில் எவர் சில் வர் பாத்திரம் சிக்கிக்கொண்ட நிலையில் சிரமத்துடன் காட்டு மாடு ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத னையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் காட்டெரு மையை தீவிரமாக தேடி வந்தனர். புதர் மறைவில் அமர்ந்திருந்த காட்டெருமைக்கு முதுமலை புலிகள் காப்பக வனகால்நடை மருத்துவர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தபட்டது. மயக்க ஊசி செலுத்தியதும் அங்கி ருந்து எழுந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில்  நடந்து சென்ற காட்டெருமை ஒரு கட்டத்தில் நடக்க இயலாமல் அமர்ந்தது. காட்டுமாடு அருகில் சென்ற வனத் துறையினர் அதன் கண்களில் துணியை கட்டி காலில் சிக்கிக்கொண்ட பாத்திரத்தை அறுத்து அகற்றினர். வனத்துறையினர் காட்டெமையை கண்காணித்து வந்த நிலையில் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந் ததும் காட்டுமாடு வனத்திற்குள் சென்றது.

1350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

சேலம், ஜூலை 10- சேலத்தில் காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், இது தொடர்பாக 2 பேரை  கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதி யில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாயன்று இரவு உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையி னருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதி யில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அங்குள்ள மாவு ஆலை அருகே நின்ற காரிலிருந்து மூட்டைகளை இறக்கி வைக்கப்படுவதைக் கண்டனர். உடனடியாக ஆலைக்குள் சென்று ஆய்வுசெய்த போது, அங்கு ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசா ரணையில், சேலத்தாம்பட்டி, பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, அதற்கு பாலீஷ் போட்டு கோழிப்பண்ணை மற்றும் வடமாநிலப் பகுதிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதைய டுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (30), இடைத்தரகரான அதேபகுதியைச் சேர்ந்த சாமியப்பன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலா 50  கிலோ கொண்ட 27 மூட்டைகளில் இருந்த 1,350 கிலோ ரேசன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஆலையின் உரிமையாளர் கோகிலா என்ப வரை தேடி வருகின்றனர்.

மதுபோதையில் தகராறு: ஒருவர் உயிரிழப்பு கோபி

, ஜூலை 10- கோபியில் மதுபோதையில் நண்பர்கள் இருவருக் கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த நிலை யில், மற்றொருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள ராமர் எக்ஸ் சன் வீதியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கிருஷ்ண சாமி, நஞ்சகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி சீனிவாசன். நண்பர்களான இருவ ரும் கோபி வாய்க்கால்ரோடு பகுதியில் உள்ள மதுபா னக் கடைக்கு செவ்வாயன்று மது அருந்த சென்றுள்ள னர். இருவரும் அங்கேயே மதுவை  அருந்திக்கொண்டி ருந்தபோது மதுபோதையில் மது வாங்கி கொடுத்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. தகராறின்போது ஆத்திரமடைந்த சீனிவாசன் கிருஷ்ணசாமியை அடித்து தலையில் கல்லால் தாக்கியுள்ளார். இதில், கிருஷ்ணசாமி மயங்கி கீழே  விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் புதனன்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோபி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலை யில் தலைமறைவாக இருந்த சீனிவாசனை வியாழ னன்று போலீசார் கைது செய்தனர்.

முறைகேடாக டீசல் விற்பனை: 8 பேர் கைது

தருமபுரி, ஜூலை 10- தருமபுரி நெடுஞ்சாலை பகுதியில் முறைகேடாக டீசல் விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்து, 415 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் லாரி களிலிருந்து டீசலை திருடி, அதில் மண்ணெண்ணெய் உள் ளிட்டவைகளை கலப்படம் செய்து முறைகேடாக விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. லாரி ஓட்டுநர்கள் சிலரும் உடந்தையாக இருந்து, கலப்பட டீசலை பயன்படுத்துவதால் வாகன என்ஜின்கள் பழுதடைந்து விடு வதாகவும், இதனால் வாகன உரிமையாளர்கள் நட்டமடைந்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி வாகன உரிமையா ளர்கள் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோ கரனிடம் புகாரளித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வா ளர்கள் தலைமையிலான போலீசார் செவ்வாயன்று மாலை  முதல் காரிமங்கலம் நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்து  மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது பொன்னேரி, கெரகோடஅள்ளி, அன்பு நகர்  ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் சிலர் முறைகேடாக டீசல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த குமார் (32), செல்வராஜ் (22), கோபி (23), சுப்பிர மணி (65), சக்திவேல் (47), பிரவீன்குமார் (25), செல்வ ராஜ் (38), கலைச்செல்வன் (35) ஆகியோர் என்பவதும், டீசலை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 415 லிட்டர் டீசலை பறிமுதல் செய்த னர். 

பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜூலை 10- ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் சனியன்று (நாளை) ஈரோடு, வீரப்பன்சத்திரம் அசோக புரத்திலும், பெருந்துறை, சிறுகளஞ்சியிலும், மொடக்குறிச்சி, லக்காபுரம், கொடுமுடி, ஆவுடையார் பாறை, கோபி, அன்னை சத்யா தடப்பள்ளி, நம்பியூர் - வேமாண்டம்பாளை யம், பவானி- மயிலம்பாடி, அந்தியூர் -சென்னம்பட்டி முரளி, சத்தி - புளியங்கோம்பை, தாளவாடி - ஹங்கல்வாடி நியாய விலைக்கடையிலும் நடைபெறுகிறது. இம்முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி பெயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.