இடம் மாறும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
உதகை, அக்.8- உதகையில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண் டுள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழை வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், உதகை தாவர வியல் பூங்கா மற்றும் அதன் அருகே உள்ள கிளன்ராக் காலனி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை இதுவரை 20க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களை வேட்டையாடி சென்றுள் ளது. அந்த சிறுத்தையைப் பிடிக்க தாவரவியல் பூங்கா பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அந்த சிறுத்தை தாவரவியல் பூங்காவிலிருந்து கிளன்ராக் பகுதிக்கு சென்ற தால் அப்பகுதியிலும் கூண்டு வைக்கப்பட்டது. இதற்கி டையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு வண்டிச்சோலை பகுதி யில் அதே சிறுத்தை நாயை வேட்டையாடியது தெரிய வந்தது. இதனால் சிறுத்தை மீண்டும் இடம் மாறி சென்றிருப்ப தால் அதை பிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலை யில், வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையிலான வனத்துறை யினர் வண்டிச்சோலை பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதோடு, கிளன்ராக் பகுதியிலிருந்த கூண்டையும் இடமாற்றி இங்கு வைத்துள்ளனர். மேலும், வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.