காவிரியில் வெள்ளம்: விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
சேலம், ஆக.20- மேட்டூர் அணையிலிருந்து தண் ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், நெரிஞ்சிப்பேட்டை யில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பியதைத் தொடர்ந்து, உபரிநீர் காவிரி ஆற் றில் வெளியேற்றப்பட்டுள்ளது. இத னால், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் காவிரி ஆற்றில் திறக்கப் பட்டுள்ளது. இதனால், கரை யோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட தோடு, ஆற்றில் இறங்கி துணி கள் துவைப்பதோ, குளிப்பதோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, தற்படம் எடுக்கவோ செல்லக் கூடாது. தாழ்வான பகுதியில் வசிப் பவர்கள் கவனத்துடன் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆற்றில் அதிகள வில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் ஈரோடு மாவட்டம், நெரிஞ் சிப்பேட்டைக்கும் – சேலம் மாவட் டம், பூலாம்பட்டிக்கும் இடையில் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் பயணிகள் விசைப்படகு போக்குவ ரத்து செவ்வாயன்று முதல் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், படகுகள் நெரிஞ்சிப்பேட்டையில் கரையோ ரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கிய வீடுகள்
நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் வழியாக பாயும் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால், கரையோர பகுதி களான மணிமேகலை வீதி, பொன் னியம்மாள் வீதி, கலைமகள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், நூற்றாண்டு பழமை வாய்ந்த குமாரபாளையம் - பவானியை இணைக்கும் சிறு பாலம் தற்பொழுது மூடப்பட்ட தால், வாகன ஓட்டிகள் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீய ணைப்பு துறையினரும், வருவாய்த் துறையினரும் வெள்ளப்பாதிப்பு கள் குறித்து ஆய்வு செய்து வரு கின்றனர்.