அனுமதி பெறாமல் சுற்றுலா நடத்திய தனியார் எஸ்டேடுக்கு அபராதம்
உதகை, செப்.16- உதகை அருகே உள்ள தனியார் எஸ்டேட் அனுமதி பெறாமல் சுற்றுலா நடத்தியது கண்டறியப்பட்டதால், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பப் டது. நீலகிரி மாவட்டம், கவர்னர் சோலா வனச்சரகம், கவர்னர்சோலா பிரிவு, கொள்ளிக்கோடு மந்து காவல் சுற்று பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அங்கர்போர்டு எஸ்டேட் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர், சட்ட விதிகளுக்கு முர ணாக சுற்றுலாப் பயணிகளுக்கு அப ராதம் வசூல் செய்தும், துறை அனு மதி பெறாமல் சுற்றுலா நடத்தி வந்த தும் வனத்துறைக்கு தெரியவந்தது. இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் சு.கெளதம் உத்தரவின் படி, கவர்னர் சோலை வனச்சரக அலுவலர் மா.பெ. செந்தில்குமார், வனத்துறை சட்ட விதிகளுக்கு முர ணாக செயல்பட்டு வந்த அங்கர் போர்டு எஸ்டேட் உரிமையாளர் மற் றும் மேலாளர் ஆகியோருக்கு நோட் டீஸ் கொடுத்து, விசாரணை மேற் கொண்டார். குற்றச்செயலை அவர் கள் ஒப்புக்கொண்டதின் அடிப்படை யில், தமிழ்நாடு அரசு வனச்சட்டம் 1882 இன் பிரிவுகளின்படி வன குற்ற வழக்குப் பதிவு செய்து இணங்க கட்ட ணமாக ரூ.1 லட்சம் வசூலிக்கப்பட் டது. இதன் மூலம் உதகையில் உள்ள தனியார் எஸ்டேட் மற்றும் தனியார் தோட்டங்களில் அரசு விதிகளை மீறு பவர்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என வனத்துறை யினர் எச்சரித்துள்ளனர்.