tamilnadu

img

காவிரியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் துவக்கம்

காவிரியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் துவக்கம்

சேலம், ஜூலை 13- காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையில், பூலாம் பட்டி காவிரி கதவணை பகுதியில் சனி யன்று முதல் விசைப்படகு போக்கு வரத்து மீண்டும் தொடங்கியது. சேலம் மாவட்டம், எடப்பாடியை  அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை  நீர்த்தேக்கப் பகுதிகளில் சேலம்  மாவட்ட எல்லையான பூலாம்பட்டியை யும், ஈரோடு மாவட்டப் பகுதியான நெருஞ்சிப்பேட்டையையும் இணைக் கும் வகையில் விசைப்படகு போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. இப் பகுதியில் வேறு தரைவழிப் போக்கு வரத்து வசதி இல்லாததால், இந்த விசைப்படகுகள் மூலம் பள்ளி, கல் லூரி மாணவர்கள், அலுவலர்கள், விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி  இரு மாவட்டங்களுக்கும் சென்று வந்த னர். இந்நிலையில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பெய்துவந்த தொடர் மழையால் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து, மேட்டூர்  அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத னால் பூலாம்பட்டி பகுதியில் செயல் பட்டு வந்த விசைப்படகு போக்குவ ரத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 29 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் சுமார் 20 கி.மீ. சுற்றி மறு கரைக்கு சென்று வந்தனர். தற்போது  மேட்டூா் அணையிலிருந்து வெளியேற் றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்தது. இதையடுத்து, சனியன்று முதல்  பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப் பேட்டைக்கு இடையே நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண் டும் தொடங்கியது. இருப்பினும், இப் பகுதியில் முகாமிட்டுள்ள பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான அலுவலர்கள் விசைப்படகு போக்குவரத்தை கண் காணித்து வருகின்றனர்.