குப்பைக் கழிவுகள் கொட்ட எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம், ஆக. 7 – சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத் துள்ள அரசிராமணி பேரூராட்சிக் குட்பட்ட குறுக்குப்பாறையூர் பகுதி யில் குப்பைக் கழிவுகளைக் கொட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசா யிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தி வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரசிராமணி பேரூராட்சி, 14 ஆவது வார்டு குறுக்குப்பாறையூர் பகுதியில், தமிழக அரசின் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் குப்பைக் கழிவுகளைக் கொட்டும் பணி நடை பெற்று வருகிறது. இதனால், நிலத் தடி நீர் பாதிக்கப்படும், விவசாய நிலங்கள் மாசுபடும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இத னால் ஆவேசமடைந்த விவசாயி கள், விவசாய சங்கத்தினர், பெண் கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் 54 ஆவது நாளாக தங்கள் போராட்டத் தைத் தொடர்ந்தனர். பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பியதோடு, அப்பகுதி யில் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப் படைத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதன்காரணமாக விவசாயிகள் மேலும் கோபமடைந்தனர். எங்க ளின் நியாமான கோரிக்கை ஏற்கும் வரையில் எங்கள் போராட்டம் உறுதி யுடன் தொடரும் என விவசாயிகள் சங்கத்தலைவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.