மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவை, அக்.7- ஆனைகட்டியில், காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந் தது. தமிழக – கேரளம் எல்லையில் அமைந்துள்ள ஆனை கட்டி பகுதி, கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு யானைகள் அடிக்கடி இடம்பெயரும் இடமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வார மாக உடலில் காயங்களுடன் மக்னா யானை ஒன்று கேரள வனப்பகுதியிலிருந்து தமிழகத்தின் கூடப்பட்டி மலைவாழ் கிராமத்திற்கு அருகே வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பவானி ஆற்றின் மையப் பகுதியில் இந்த யானை நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் கவனித்து, தமிழக மற்றும் கேரள வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இரு மாநில வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, யானையை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், திங்க ளன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோவிலில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை
கோவை, அக்.7- உணவு தேடி பழங்குடியினர் வணங்கும் அம்மன் கோவி லில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்து வெளியே வர முடியா மல் சிக்கித் தவித்தது. கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள தானிக்கண்டி எனப்படும் மலைவாழ் கிராமம். இங்கு வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வணங்கக் கூடிய அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், திங்க ளன்று இரவு உணவு தேடி அந்த கோயிலுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையானது வெளியே வர முடியா மல் சிக்கித் தவித்தது. உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கு இருந்து விரட்ட பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பி யும் வெளியேற்ற முயற்சி செய்தனர். உள்ளே சிக்கிய யானை சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, வனத்திற்குள் சென்றது. இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.