52 சங்கங்களை லாபத்தில் இயக்குவதற்கு முயற்சி
அமைச்சர் மனோ.தங்கராஜ் பேச்சு
ஈரோடு, ஆக. 2- 52 சங்கங்களை லாபத்தில் இயக்கு வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக, பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட் டரங்கில், சனியன்று பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ.தங்கராஜ், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பங் கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களிடம் மனோ.தங்கராஜ் பேசுகையில், கடந்தாண்டு விவசாய பெரு மக்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.88 கோடி வழங்கி சாதனை படைத்துள்ளோம். அது மட்டுமின்றி வங்கிகள் மூலமாக ரூ.10 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 472 கூட்டுறவு சங் கங்கள் பணியாற்றி வருகின்றன. பால் மட்டும் வாங்கி செயல்படுகிற சங்கங்களாக இல்லாமல், பல்வகை சேவைகளை உள் ளடக்கிய சங்கங்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், 72 சங்கங்கள் அவ் வாறு மாற்றப்பட்டுள்ளன. ரூ.98 லட்சம் மதிப் பிலான பால் உபபொருட்கள் விற்பனை செய் யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 5550 மெ.டன் கால்நடை தீவனம் விற்பனை செய்யப்பட் டுள்ளது. தரத்தின் அடிப்படையில் விலை வழங்குகின்ற திட்டம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பால் விவசாயி கள் வழங்கும் பாலுக்கு தரத்தையும், அளவை யும் அளவீடு செய்து அதற்கான விலை 10 நாட் களுக்குள் வழங்கப்படும் நிலையை ஏற்ப டுத்தியுள்ளோம். லாபமில்லாமல் இயங்கி வந்த 52 சங்கங்களையும் லாபத்தில் இயக்கு வதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார், மாநகராட்சி துணை மேயர் வே.செல் வராஜ், மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் பொது மேலாளருமான மு.அமிர்த லிங்கம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.