tamilnadu

img

வாய்க்காலில் கலக்கும் சாயக்கழிவு நீர்

வாய்க்காலில் கலக்கும் சாயக்கழிவு நீர்

நாமக்கல், அக். 15- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே வாய்க்கால் நீரில் பீட்ரூட்  நிறத்தில் சாயக்கழிவுநீர் ஓடியதால்  பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள னர்.  பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத் திப்பாளையம் ராமகிருஷ்ணா நகர் பகு தியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. காவிரி ஆற்றங்கரை யோரம் உள்ள வாய்க்கால் நீர் பீட்ரூட்  கலரில் நிறம் மாறி ஓடியதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பள்ளிபாளையம் மற்றும்  திருச்செங்கோடு நகராட்சி பகு திகளுக்கு இந்த காவிரிக் கரை யோரத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமா கவே குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம்  தலையிட்டு சாயக்கழிவை கலக்கும்  நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.