tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களின் கனவுகளைப் பறிக்காதீர்....! ஊழியர்களின் நலன் காக்க, இ.எஸ்.ஐ. திட்டமே நிரந்தர தீர்வு

டாஸ்மாக் ஊழியர்களின் கனவுகளைப் பறிக்காதீர்....! ஊழியர்களின் நலன் காக்க, இ.எஸ்.ஐ. திட்டமே நிரந்தர தீர்வு

தமிழகத்தில் டாஸ்மாக் நிறு வனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழி யர்களின் மருத்துவ நலன் தொடர் பான ஒரு முக்கியப் பிரச்சனை ஊழியர்களின் பேசுபொருளாக உள்ளது.  டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப் படுத்தியுள்ள மருத்துவத் திட்டம், ஊழியர்களின் நலன்களுக்குப் பதிலாக, அவர்களின் உரிமை களையே கேள்விக்குறியாக்கி வரு கிறது. குறிப்பாக, இத்திட்டத்தை ஏற்காத ஊழியர்களிடம் கட்டாயப் படுத்தி கையெழுத்து வாங்கும்  செயல், அரசின் இந்த அணுகுமுறை மீதான சந்தேகங்களை வலுப்ப டுத்துகிறது. இதை, ‘தன் கையைக்கொண்டே கண்ணைக் குத்துவது’ போல டாஸ் மாக் நிர்வாகம் செய்கிறது என்று ஊழியர்கள் வேதனை தெரிவிக் கின்றனர். மேலும், தமிழக அரசு நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவக் கல்வி  இடஒதுக்கீட்டை டாஸ்மாக் ஊழியர் களுக்கு மறுப்பதன் மூலம், அவர்க ளின் பிள்ளைகள் மருத்துவர்களாக வேண்டும் என்ற கனவை அது பறிப்பதாகவே தெரிகிறது. இ.எஸ்.ஐ. திட்டம்: ஒரு பாதுகாப்பு வளையம் ஒன்றிய அரசின் தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் (Employees’ State Insurance Corporation - ESI) வழங்கும் இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டம், ஒரு விரிவான மற்றும் முழுமையான மருத்துவப் பாது காப்புத் திட்டமாகும். இத்திட்டத் தின் கீழ் ஊழியரும், வேலை அளிக் கும் நிறுவனமும் இணைந்து பங்க ளிப்புச் செய்கிறார்கள். ஊழியர் தனது ஊதியத்தில் 0.75% மற்றும் நிறுவனம் 3.25% என மொத்தம் 4% சந்தா செலுத்த வேண் டும். இதன்மூலம், எவ்வளவு பெரிய மருத்துவச் செலவானாலும், இ.எஸ்.ஐ. நிர்வாகம் முழுவதை யும் ஏற்றுக்கொள்ளும். ஊழியரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என அனைவரும் எந்த உச்ச வரம்பும் இல்லாமல் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் அதனு டன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் உயர்  சிகிச்சை பெறலாம். நோய்வாய்ப் பட்ட நாட்களில் ஊழியரின் சம்பள இழப்பை இ.எஸ்.ஐ. நிர்வாகமே ஈடு செய்யும். தொழில் சார்ந்த ஊனம் ஏற்பட்டால், மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரில் பணப் பலன் கள் கிடைக்கும். இ.எஸ்.ஐ. சந்தா தாரர்களின் பிள்ளைகளுக்கு மருத் துவக் கல்லூரிகளில் இடஒதுக் கீடு வழங்கப்படுகிறது. ஓய்வுக்குப் பிறகும், ஊழியரோ அல்லது அவ ரது குடும்பத்தினரோ குறைந்த சந்தா  செலுத்தி வாழ்நாள் முழுவதும் மருத்துவ வசதி பெறலாம்.  டாஸ்மாக் திட்டத்தின் குறைபாடுகள் மாறாக, டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுத்தும் புதிய மருத்துவத் திட்டம், இ.எஸ்.ஐ. திட்டத்தின் ஒரு சில அம்சங்களை மட்டுமே உள்ள டக்கி, பெரும் நிதிச் சுமையை ஊழி யர்களின் தலையில் திணிக்கிறது.  குறிப்பாக இசைவு கடிதம் என்கிற பெயரில் இத்திட்டத்தை ஏற்காத ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கும் செயல் அரசின் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. இத்திட்டத் திற்கான சந்தா முழுவதையும் ஊழி யர்கள் மட்டுமே செலுத்த வேண் டும். விபத்து சிகிச்சை தவிர, மற்ற சிகிச்சைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்சம் என்ற உச்சவரம்பு உள் ளது. சிகிச்சை பெறும் நாட்களுக்கு  ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப் படாது. தொழில் சார்ந்த ஊனம், வேலையிழப்பு நிவாரணம், பிரசவ கால உதவி, இறப்புக்கான ஓய்வூ தியம் போன்ற எந்தப் பணப் பலன் களும் இத்திட்டத்தில் இல்லை. ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்விக்கான இடஒதுக் கீடு கிடையாது. சிகிச்சைக்கான பணத்தை முதலில் ஊழியர் செலுத்திவிட்டு, பிறகு அதைத் திரும்பப் பெற மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அப்போ தும், பல இடங்களில் கையூட்டு அளித்தே செலவு செய்த பணத்தை திரும்பப்பெற முடியும் என்கிற நிலை எதார்த்தமாக உள்ளது. தமிழக அரசு மறுபரிசீலனை செய்திடுக டாஸ்மாக் ஊழியர்களின் நலன் களைக் கருத்தில் கொண்டு, தமி ழக அரசு உடனடியாக இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண் டும். இது ஊழியர்களின் மருத்து வப் பாதுகாப்பு மட்டுமன்றி, அவர்க ளின் பிள்ளைகளின் எதிர்காலத்திற் கும் வழி வகுக்கும். இ.எஸ்.ஐ. திட்டம் ஊழியர்களுக்கு அளிக்கும் பாது காப்பை, டாஸ்மாக் நிர்வாகத்தின் தற்போதைய திட்டம் ஒருபோதும் வழங்காது என்பதை நிர்வாகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு, நீட் தேர்வுக்கெதிராகப் பேசும்போது, அதேநேரம் டாஸ் மாக் ஊழியர்களின் பிள்ளைக ளுக்கு இ.எஸ்.ஐ. மூலம் கிடைக்கும் மருத்துவ இடஒதுக்கீட்டை மறுப் பது பெரும் முரண்பாடாக உள்ளது.  எனவே, தமிழக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. திட் டத்தை கட்டாயமாக்க வேண்டும். இது டாஸ்மாக் ஊழியர்களின் கனவு களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் போராடி வரு கிற நிலையில், இஎஸ்ஐ மருத் துவ திட்டத்தின் அவசியம் குறித்து தற்போது ஊழியர்களின் பேசு பொருளாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் ஊழியர் களிடம், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் மாநிலம் தழு விய கையெழுத்து இயக்கத்தை மேற் கொள்ள இருக்கிறது குறிப்பிடத்தக் கது. (நநி)