tamilnadu

img

வேதிப் பொருட்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் அழிப்பு

வேதிப் பொருட்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் அழிப்பு

நாமக்கல், செப்.14- ஜேடர்பாளையம் பகுதி யில் வேதிப்பொருட்கள் மூலம் பழுக்க வைத்து, விற் பனைக்காக வைக்கப்பட்டி ருந்த வாழைத்தார்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் குழுவினர், வடகரை,  ஆத்தூர், பரமத்திவேலூரில் உள்ள பெட்டிக்கடைகள், தேநீர் கடை மற் றும் மோகனூர் பகுதியில் இயங்கி வரும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். இதில், வாழைத்தார் குடோனில் 15  வாழைத்தார்கள் வேதிப்பொருட்கள் தெளித்து பழுக்க வைத்தது கண்டறியப்பட் டது. செயற்கையாக பழுக்க வைக்க பயன்ப டும் வேதிப்பொருட்கள் 1.1 லிட்டர் கண்ட றியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15 வாழைத்தார்களையும் பேரூ ராட்சியின் குப்பைக்கிடங்கில் கொட்டி  அழித்தனர். மேலும், தேநீர் கடைகளில் மேற் கொண்ட ஆய்வில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் 20.5 கிலோ கிராம் பறி முதல் செய்யப்பட்டது. 3 தேநீர் கடைகள்  மற்றும் வாழைத்தார். குடோன் ஆகிய வற்றிக்கு மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது.