tamilnadu

img

கொண்டா ரெட்டீஸ் மக்களுக்கு இனச்சான்று வழங்க வலியுறுத்தல்

கொண்டா ரெட்டீஸ் மக்களுக்கு இனச்சான்று வழங்க வலியுறுத்தல்

சேலம், செப்.13- உடனடியாக இனச்சான்று வழங்க வேண்டும் என கொண்டா ரெட்டீஸ் பழங்குடியின மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட் டம், கொளத்தூர் ஒன்றியம், பண்ண வாடியில், தமிழ்நாடு கொண்டா ரெட் டீஸ் பழங்குடியின மக்கள் சங்க  மாநில முதல் பேரவை நடைபெற் றது. மலைவாழ் மக்கள் சங்க ஒன்றி யத் தலைவர் நா.வேணுகோபால் தலைமை வகித்தார். மலைவாழ் மக் கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு சிறப்புரையாற்றினார். விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, துணைத்தலைவர் பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எஸ்.வசந்தி, விவசாயிகள் சங்க ஒன்றியப் பொருளாளர் காவேரி துரை உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், சேலம், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்க ளில் பல ஆண்டுகளாக கொண்டா ரெட்டீஸ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்க ளுக்கு வழங்கப்பட்ட பழங்குடியின சான்று கடந்த 40 ஆண்டுகளாக சில மாவட்டங்களிலும், 20 ஆண்டுகளாக சில மாவட்டங்களிலும் வழங்கப் படாமல் உள்ளது. ஆனால், ஊராட்சி களில் இட ஒதுக்கீடு முறையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்ப டுகின்றனர். தனித்தனியாக ஆங் காங்கே பழங்குடியின சான்று கேட்டு போராடி வருகின்றனர். எனவே, அனைவரையும் ஒருங்கிணைப்பது என்றும், அதன் பொருட்டு தமிழ்நாடு கொண்டா ரெட்டீஸ் பழங்குடியின சங்கம் உருவாக்குவது என்றும், இச்சங்கம் சார்பில் பழங்குடியின சான்று அரசாணை எண்:104இன்படி வழங்கவும் வரை வலுமிக்க போராட் டங்களை மேற்கொள்வது; நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் மேட் டூர் அல்லது சேலத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் துவங்கிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக பி.கே.ராஜேந்திரன், செயலாளராக நா.வேணுகோபால், பொருளாளராக மகேந்திரன், துணைத் தலைவர்களாக ரதி, ரவீந்திரன், துணைச்செயலாளர்களாக பால கிருஷ்ணமூர்த்தி, செந்தில் உட்பட 17 பேர் கொண்ட மாநிலக்குழு அமைக்கப்பட்டது.