tamilnadu

img

ஏலச்சீட்டு முதிர்வு பணம் தர தாமதம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

ஏலச்சீட்டு முதிர்வு பணம் தர தாமதம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

தருமபுரி, செப்.18- ஏலச்சீட்டு முதிர்வு பணத்தை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி, தருமபுரி காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள்  மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரியைச் சேர்ந்த கிரிஜா  (38), வசந்தா (32), ஜெயந்தி (48), முனியப்பன் (32), புலிகரை யைச் சேர்ந்த மாது (50), எடப்பாடியைச் சேர்ந்த செஞ்சி  (35) ஆகியோர் வியாழனன்று தருமபுரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு ஒன்றை அளித்த னர். அதில், எங்கள் அனைவருக்கும் அறிமுகமான தருமபுரி  சந்தைப்பேட்டை பால்டிப்போ பகுதியைச் சேர்ந்த நபரிடம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரும் தலா ரூ.2  லட்சம் மதிப்பிலான ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந் தோம். ஏலச்சீட்டு பணம் முதிர்வு காலம் முடிவடைந்து 8 மாதங் கள் ஆகிவிட்டது. முதிர்வடைந்த பணத்தை தருவதாக கூறிய  சீட்டு நடத்துபவர், பணத்தை தராமல் ஏமாற்றும் நோக்கத் தில் காலம் தாழ்த்தி வருகிறார். பலமுறை அவரிடம்  பணத்தை கேட்டும் தரவில்லை. எனவே, நாங்கள் கட்டிய ஏலச் சீட்டு முதிர்வு தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.