tamilnadu

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு தனி செல்போன் எண்கள் வழங்க முடிவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு  தனி செல்போன் எண்கள் வழங்க முடிவு

வேலூர், ஆக.29-  கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று கூடுதல் பதிவாளர் உத்தர விட்டுள்ளார்.  கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், நிறு வனங்கள் ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. அவை தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக பிரத்யேக குழு எண்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணியை மாநில கூட்டுறவு ஒன்றிய மானது மேற்கொள்கிறது. புதிய எண்கள் வழங்குவதன் காரணமாக, ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும், வங்கியும் தங்களுக்கென பிரத்யேக ஆன்ட்ராய்டு கைப்பேசியைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். இந்த செல்போன் உரிமங்கள் புதுப்பிப்பு, பெறுவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் வர்த்தக நடவடிக்கை களுக்கும் உபயோகிக்கலாம். செல்போனை கூட்டுறவு சங்கத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கையாள வேண்டும். பணி மாறுதல் மற்றும் ஓய்வின்போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும். சங்கப் பணிகள் தொடர்பான குறுந்தகவல்கள் அனுப்புவதும், சங்கத்திற்கு வரும் தகவல்கள் மற்றும் உயர் அலுவலர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்கள் அனைத்தும் பிரத்யேக செல்போன் எண்களிலேயே கிடைக்கும்படி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.