காவிரி நீரை வாரம் மூன்று முறை விநியோகிக்க வேண்டும் என சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக.18- காவிரி நீரை வாரம் மூன்று முறை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆனங்கூர் அண்ணா நகர் கிளை சார்பாக திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ஆனங்கூர் டி.எம் காளியண்ணன் நகரில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டியி லும், அண்ணா நகரில் உள்ள 30 ஆயி ரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டியிலும், புள்ளா கவுண்டம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காவிரி நீரை வாரம் மூன்று முறை வழங்கப் பட வேண்டும். பழைய ஆழ்துளை கிணறுகளை சரி செய்து பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புதியதாக 2ஆயிரம் லிட்டர் மினி டேங்க்கை இரண்டு இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சிபிஎம் ஆனங்கூர் அண்ணா நகர் கிளை சார்பில் ஆனங்கூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர்கள் தமிழ்ச்செல் வன், ராஜசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த தோழர் ஏ.ஆதிநாரா யணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சீனிவாசன், விதொச மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் திருச்செங் கோடு நகர பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO)அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.