tamilnadu

img

குத்தகை விவசாயியை வெளியேற்ற முயற்சி அறநிலையத்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குத்தகை விவசாயியை வெளியேற்ற முயற்சி அறநிலையத்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 18- நீண்ட காலமாக குத்தகை நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாயியை வெளியேற்ற முயற் சிக்கும் அறநிலையத்துறையின் நட வடிக்கையைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், ஜெர்த்தலாவ் ஊராட்சி, திம்மனஹள்ளி வெங்கட் ரமணசுவாமி கோவில் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 33 ஆண்டுகளாக குத்தகைப் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்து, தனது தாத்தா, அப்பாவிற்கு பிறகு தற்போது கிருஷ்ணன் என்பவர் பயன்படுத்தி தவறாமல் பணம் கட்டி விவசாயம் செய்து வருகிறார். இந் நிலையில், சிலரின் சுயநல தேவைக் கான தூண்டுதலின்படி, இந்து அற நிலைத்துறையின் மூலமாக நிலம் பொது ஏலத்திற்கு விடப்படுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுபவத்தில் இருக்கும் விவசாயி  கிருஷ்ணன் பக்கம் சட்ட உரிமை  உள்ளது. இந்து அறநிலையத் துறை ஒரு தலைப்பட்சமாக செயல் படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, கோவில் மானிய நிலத்தில் வாழ்ந்து வருபவர்களை அறநிலை யத்துறை நிர்வாகமே வெளி யேற்றக்கூடாது. மானிய நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்களை குத்தகைப்பதிவு சட்டத்தின் அடிப் படையில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இந்து அறநிலை யத்துறையே ஊர் கட்டப்பஞ்சா யத்துக்கு அடிபணிந்து விவசாயி களுக்கும், வீடு கட்டி குடியிருப் பவருக்கும் துரோகம் செய்யக் கூடாது. மானிய நிலத்தாரர்களுக்கு பட்டா கிடைக்க உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் பி.கோவிந்தசாமி  தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.கலாவதி, வட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயராமன், ஏ.சேகர், என்.வரதராஜன், பி.முரு கன், ஜி.பாண்டியம்மாள், சி.ராஜா, கே.எம்.முருகேசன், வி.உதய குமார், ஜி.நக்கீரன், கிருஷ்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.