வனவிலங்கு தாக்குதலில் மரணம் நிகழ்ந்தால், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை
உதகை, அக். 9 – நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தக் கோரியும், வனவிலங்கு தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் நிரந்தர அரசுப் பணி வழங்க வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. நீலகிரி மாவட்டத்தில், குறிப்பாக கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட குடியிருப் புப் பகுதிகளில், யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட் டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு, பகல் நேரங்களில் வனவிலங்குகள் மக்களைத் தாக்கி அவ்வப்போது உயி ரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதை யாகி வருகிறது. இந்த உயிரிழப்பு களைத் தடுக்க வனப் பகுதிகளில் நிரந்த ரக் கூடாரங்கள் அமைத்து கண்காணிப் பது, அதிவிரைவு செயல் குழுக்களை வலுப்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்ப டுத்துவது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண் டும். இனியும் மனித விலங்கு மோதல் நடைபெறாமல் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வன விலங்கு தாக்குதலில் உயிர் இழந்தால் அக்குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், நிரந்தர அரசுப் பணியும் வழங்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலகிரி மாவட் டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ராஜன், குஞ்சு முக மது, எம்.ஆர். சுரேஷ், பி. ரமேஷ், ஏ.வி. ஜோஸ், நவீன், சிஐடியு மாவட்டச் செய லாளர் வினோத், விவசாய சங்க மாவட் டச் செயலாளர் யோகண்ணன், தலை வர் என். வாசு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இராசி இரவிக்குமார், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், த.தீ.ஒ.மு. மாவட்டத் தலைவர் பெரியார் மணிகண் டன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் யசோதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.
