tamilnadu

img

பாலம் அமைக்கக்கோரி சிபிஎம் பிரச்சார இயக்கம்

பாலம் அமைக்கக்கோரி சிபிஎம் பிரச்சார இயக்கம்

உதகை, ஜூலை 20- நாரங்காகடவு ஆற் றின் குறுக்கே பாலம் அமைக்கக்கோரி மார்க் சிஸ்ட் கட்சியினர் பிரச் சார இயக்கத்தில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட் சிக்குட்பட்ட புளியம்பாறை கிராமத்திலிருந்து ஆமைக்குளம் கல்லூரியை இணைக்கக்கூடிய நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, நெல்லியாளம் நகராட்சியின் அலட்சியத்தை கண்டித்தும், உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சனியன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இராசி இரவிக்குமார், ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் கே.எம்.ஹாஜி, ஹசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.