நாரங்காடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் வாக்குறுதி
உதகை, ஜூலை 15 – நாரங்காடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைப்பது தொடர்பான விவகாரத் தில், திங்களன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், விரைவில் பாலம் அமைக்க அதிகாரிகள் உறுதியளித்தனர். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நக ராட்சிக்குட்பட்ட கோழிக்கொள்ளி, நாரங்கா கடவு, கொல்லூர் உள்ளிட்ட பழங்குடி கிரா மங்கள் உள்ளது. இங்கு ஐநூறுக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இதன்ஒருபகுதியாக, ஆமைக்குளம் கல்லூரியை புளியம்பாறை யுடன் இணைக்கும் நாரங்காடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், மு.க.ஸ்டாலின் பங்கேற்றபோது, ஆமைக் குளத்தைச் சேர்ந்த மாணவி தமிழரசியின் கோரிக்கையை ஏற்று, திமுக ஆட்சிக்கு வந்த தும் 100 நாட்களுக்குள் பாலம் கட்டித் தரப்ப டும் என உறுதியளித்தார். அதைத்தொ டர்ந்து, மாநில பழங்குடியினர் துணைத் திட்டத் தின் (SADP) கீழ் ரூபாய் 30 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நெல்லியாம்பாளையம் நகராட்சியின் பொய் அப்பலம் ஆனால், பாலம் கட்டுவதற்கான அனு மதி பெற பரிவேஷ் தளத்தில் விண்ணப்பிக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் காலதாம தம் செய்தது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் தொடர்ந்து கேட்டபோதும், நெல்லியாம் பாளையம் நகராட்சி நிர்வாகம் விண்ணப் பித்துவிட்டோம், இன்னும் வனத்துறை பதில் அளிக்கவில்லை என்றே சொல்லி வந்தனர். ஆனால், வனத்துறையும் 30.07.2024 அன்று நகராட்சிக்கு கடிதம் அனுப்பி, பரிவேஷ் தளத் தில் விண்ணப்பித்தால்தான் தடையில்லா சான்று வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந் தது. ஒரு வருடமாகியும் நகராட்சி தரப்பிலி ருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில், கான்கிரீட் பாலம் கட்டும் பணி தடைபட்டு, வனத்துறையால் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லியாம்பாளையம் நகராட்சியை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு கடந்த சனியன்று கால வரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இரவு பத்து மணிக்கு மேல் போராட் டம் நடைபெற்ற நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி யினரை கைது செய்யும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கூடலூர் கோட்டாட்சியர் மற் றும் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி ஆகி யோர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, திங்களன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக விவாதிக் கலாம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தனர். இதைத் தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை இதனைத்தொடர்ந்து திங்களன்று, கோட் டாட்சியர் அலுவலகத்தில், கூடலூர் மாவட்ட வன அலுவலர், கோட்டாட்சியர், முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, புளியம்பாறை கிராம பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி இரும்பு பாலம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே கான்கிரீட் பாலம் அமைத்துத் தருவதாக உறு தியளித்துள்ளதை திராவிட மணி தெரி வித்தார். எம்பி.,யின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி கான்கிரீட் பாலம் அமைக்க உங்களுடன் இருப்பேன் என திராவிடமணி உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, ஒரு வருடமாக காலதாமதம் செய்து வந்த நெல்லியாளம் நகராட்சி, பரிவேஷ் தளத்தில் நாரங்காடவு பாலம் அமைக்க தடையில்லா சான்று பெறுவதற் கான விண்ணப்பத்தை உடனடியாகச் செய்வ தாக உறுதியளித்தது. இவை அனைத்தை யும் கோட்டாட்சியர் முன்னின்று கண்கா ணித்து முடித்துத் தருவதாக உறுதியளித் தார். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். சிபிஎம் எச்சரிக்கை மேற்கண்ட வாக்குறுதிகளைச் சம் பந்தப்பட்ட அதிகாரிகளும் நெல்லியாளம் நகராட்சியும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றாவிட்டால், மீண்டும் ஒரு கடு மையான போராட்டத்தை முன்னெடுப்போம் என மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவருமான என். வாசு, பந்தலூர் ஏரியா கமிட்டி செயலா ளர் பி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் இராசி இரவிக்குமார், ஏரியா கமிட்டி உறுப் பினர்கள் அசைன், ஷாஜி, புளியம்பாறை கிளைச் செயலாளர் சுபைர் மற்றும் சம்சு, சுலை மான், குஞ்சளவி, கோபாலன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.