tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

தருமபுரி, ஜூலை 6- இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் ஏ.மாதேஸ்வரன்-னின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்டத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏ.மாதேஸ்வரன்-னின்  பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிறன்று, அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஐஎம்ஏ ஹாலில் நடைபெற்றது. சேலம் கோட்ட இணைச்செயலாளர் பி.சந்திரமௌலி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வி. ஹரிணி வரவேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்ட மைப்பு துணைத்தலைவர்கள் சி.முத்துகுமாரசாமி, ஆர்.தர் மலிங்கம், பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியன், சேலம்  கோட்ட பொதுச்செயலாளர் ஆர்.ஆனந்த், இணைச்செயலா ளர் ஏ.கலியபெருமாள், தருமபுரி கிளைத் தலைவர் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.முடிவில், ஏ.மாதேஸ்வரன் ஏற்புரையாற்றினார்.