tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நிதிநிறுவனம் நடத்தி பண மோசடி - புகார்

தருமபுரி, செப். 22- பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக் கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்து, தரும புரி ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மேல்தெருவை சேர்ந்த வர் செந்தில், இவர் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தனியார்  நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுக ளுக்கும் மேலாக பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான பரிசு  திட்டங்களை அறிவித்துள்ளார். இதன்மூலம், ஆயிரத்திற் கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சிறு சேமிப்பு திட்டம், மாத  தவணையில் பணம் கட்டுதல், மாத சேமிப்பு திட்டம், ரூ.50  ஆயிரம் முதல் ரூ.50 இலட்சம் வரையிலான ஏல சீட்டு என  பல்வேறு நிதி திட்டங்களின் மூலம் சுமார் 25 கோடி ரூபாய்  வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பணம் கட்டி முதிர்ச்சி அடைந்த வர்களுக்கும், ஏலசீட்டு எடுத்தவர்களுக்கும் பணத்தை தரா மல் இன்று, நாளை என இழுத்தடித்து வந்துள்ளார்.இந்நிலை யில் கடந்த 3 மாதத்திற்க்கு முன்னர் நிதி நிறுவன உரிமையா ளர் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் தருமபுரி பொருளாதார  குற்ற பிரிவு போலீசில் புகார்  அளித்தனர். ஆனால் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்காதால்  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் நிதி நிறுவன உரிமையாளர் மீது உரிய  நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரக்கோரி புகார் மனு  அளித்தனர்.

வாக்கு திருட்டு மோசடி” நூல் வெளியீடு

கோவை, செப்.22- ஒன்றிய அரசின் வாக்கு திருட்டு மோசடி  தொடர்பான போராட்டங்கள், கருத்துகளை  தொகுப்பாக படைக்கப்பட்ட “வாக்கு திருட்டு  மோசடி” என்ற நூல் வெளியிடப்பட்டது.  பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவு டன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப்  பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந் துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.  இது குறித்த தரவுகள் வெளிவந்து கொண் டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி கட்சி கள் உட்பட நாடு முழுவதும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக வாக்கு திருட்டு மோசடி எனும் நூல்  வெளியீட்டு விழா கோவையில் நடைபெற் றது. பல் சமய நல்லுறவு இயக்கம் மற்றும் குத் தூசி குருசாமி படிப்பகம் இணைந்து நடத்திய  இந்நிகழ்ச்சியில், பல் சமய நல்லுறவு இயக் கத் தலைவர் முகமது ரபி புத்தகத்தை வெளி யிட்டார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ்  சிறு பான்மை பிரிவு மாநிலத் தலைவர் முகமது ஆரிப், பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகி கள்  மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி, செப். 22- பென்னாகரம் அருகே யானைக ளால் விவசாயப் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க, அகழிகள் அமைக்க  வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சி யரிடம் திங்களன்று விவசாயிகள் மனு  அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  400-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும் பங்கள் வசித்து வருகின்றனர். அவர்க ளின் கிராமத்தின் அருகில் பென்னாகரம் வனச்சரகம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் விளைநிலங் களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்து வதாகவும், இதனால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயி கள் தெரிவித்தனர். இந்த பாதிப்புகளைத் தடுக்க, பென் னாகரம் அருகே உள்ள செக்போஸ்ட் முதல் கோடுபள்ளம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை அகழிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாறைகள் நிறைந்த பகுதிக ளில் அகழிகள் அமைக்கப்படவில்லை. யானைகள் அந்தப் பகுதிகள் வழி யாகவே விவசாய நிலங்களுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகின் றன. கடந்த அக்டோபர் 25, 2024 அன்று  இது தொடர்பாக மனு அளிக்கப்பட்ட போது, வனத்துறை அதிகாரிகள் நேரில்  வந்து பார்வையிட்டனர். அப்போது, அகழிகளை ஆழப்படுத்தவும், பாறை கள் உள்ள இடங்களில் வெடி வைத்து அகழிகள் அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மீண்டும் ஊருக்குள் புகுந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. எனவே, பூதிப்பட்டி கிராமத்தில் யானைகள் நுழைவதை தடுக்க, யானை அகழி களை முழுமையாக அமைத்து, ஆழப்ப டுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரி டம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

சேலம், செப்.22- தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு  15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக  விவசாயிகள் சங்கத்தினர் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடு பட்டனர். மாட்டு தீவனங்கள் மற்றும் இடு பொருட்களின் விலை  உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பால் கொள்முதல்  விலையை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண் டும். பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக  விவசாயிகள் சங்கத்தினர் சேலம் தளவாய்பட்டியில்  உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு கறவை மாடுகளுடன்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர்  வேலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பால்கொள் முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் அக்டோபர் 22  ஆம் தேதியன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என  எச்சரித்தனர்.