tamilnadu

img

மாநகராட்சி குப்பைத் தொட்டியை அகற்ற வாலிபர் சங்கத்தினரிடம் உறுதியளிப்பு

மாநகராட்சி குப்பைத் தொட்டியை அகற்ற வாலிபர் சங்கத்தினரிடம் உறுதியளிப்பு

திருப்பூர், ஆக.7- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து  குப்பைத் தொட்டியை அகற்ற மாநகராட்சி அலுவ லர்கள் ஒப்புக் கொண்டனர். கொங்கு நகரில் குப்பை மலை தொடர்பாக வாலிபர் சங்கத்தினர் முறையிட்ட அடிப்படையில் மாநகராட்சி துணை ஆணையாளர் பங் கேற்ற பேச்சுவார்த்தை நடந் தது. இதில் குப்பைத் தொட்டிகளை முழுமை யாக அகற்றுவது, தினசரி சுழற்சி முறையில்  குப்பை பெற்றுக் கொள்வது என உறுதிய ளிக்கப்பட்டது. முன்னதாக போராட்டம் நடை பெற்றபோது, அங்கு வந்த மாமன்ற உறுப்பி னரின் கணவரும் அவருடன் வந்தவர்களும் வாலிபர் சங்கத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில், குப்பைத் தொட்டியை அகற்றாமல், வாலிபர் சங்கம் கட்டியிருந்த தட்டிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. இந்நடவடிக்கையை கண் டித்தும், கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்ற வலியுறுத்தியும் இரண்டாவது மண் டல அலுவலகம் முன்பு வாலிபர் சங்க வடக்கு  மாநகரச் செயலாளர் கண்ணன் தலைமை யில் முற்றுகை போராட்டம் நடந்தது. இரண் டாம் மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தரா ஜிடம் பேசியபடி, வியாழனன்று மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கழற்றப்பட்ட தட்டி கள் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும். ஞாயிற்றுக்கிழமைக்குள் ஏகேஜிநகர் பகுதி யில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டி கள் அகற்றப்படும் என உறுதியளித்துள்ள னர்.