tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி-யின் முதலாமாண்டு நினைவேந்தல்

தோழர் சீத்தாராம் யெச்சூரி-யின் முதலாமாண்டு நினைவேந்தல்

தருமபுரி, செப்.12- தோழர் சீத்தாராம் யெச்சூரி-யின்  முதலாமாண்டு நினைவுதினம் வெள்ளி யன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி, கடந்தாண்டு செப்.12 ஆம்  தேதியன்று காலமானார். இந்நிலை யில், அவரது முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உடல் தான ஒப்பு தல் படிவம் கொடுத்து, அவருக்கு அஞ் சலி செலுத்தினர். அதன்படி, தருமபுரி மாவட்டம், அரூரில் வட்டச் செயலாளர் பி.குமார், பாப்பிரெட்டிப்பட்டியில் வட் டச் செயலாளர் தி.வ.தனுசன், தருமபுரி ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி ஆகியோர் தலை மையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.பூபதி, என்.கந்தசாமி, மீனாட்சி, தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதேபோன்று, பாலக்கோட்டில் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ், பாப்பாரப்பட்டியில் பகுதிச் செயலா ளர் சக்திவேல், பென்னாகரம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம், பென்னாகரம் நகரத் தில் நகரச் செயலாளர் செல்வம், பென் னாகரம் கிழக்கு ஒன்றியத்தில் பகுதிச் செயலாளர் சக்திவேல், மொரப்பூரில் ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், நல்லம் பள்ளியில் ஒன்றியச் செயலாளர் எஸ். எஸ்.சின்னராஜ் ஆகியோர் தலைமை யில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.முத்து, மாவட்டக்குழு உறுப்பி னர் சி.ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் எம்.ரங்கசாமி, உருக் காலை அரங்கம் சார்பில் மூத்த தோழர் கள் பி.பன்னீர்செல்வம், ஆர்.ரவிசங் கர், மேட்டூரில் சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.கருப்பண்ணன் ஆகியோர் தலைமை யில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மேச்சேரி பகுதியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.மணிமுத்து, மூத்த  தோழர் பி.தங்கவேலு, தளவாய்ப்பட்டி யில் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பி னர் எ.சுந்தரம், ஏற்காட்டில் ஒன்றியச் செயலாளர் நேரு, நங்கவள்ளியில் ஒன் றியச் செயலாளர் கிருஷ்ணவேணி ஆகி யோர் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று, சிஐடியு,  ஏபிடி தொழிற்சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை அருகே நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தோழர் ஏ.ஆதிநாராயணன், நக ரச் செயலாளர் எஸ்.சீனிவாசன், விவசா யிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்  வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண் டனர். பள்ளிபாளையத்தில் நடைபெற்ற  நிகழ்விற்கு, ஒன்றியச் செயலாளர் லட்சு மணன் தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குமாரபாளையத்தில் நகரச் செயலா ளர் கந்தசாமி தலைமையில் நினைவேந் தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப் பினர் என்.சக்திவேல் உள்ளிட்டோர் பங் கேற்றனர். எலச்சிபாளையத்தில் நடை பெற்ற நிகழ்விற்கு, மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித் தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவ ராஜன் வரவேற்றார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், சுரேஷ், ந. வேலுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் பழனியம்மாள், கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ராசி புரம், நாமகிரிப்பேட்டை, கொல்லி மலை, புதுச்சத்திரம், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் யெச்சூரி-யின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.