tamilnadu

img

போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க  நாட்குறிப்பு தொடர்...கோவை இன்ஜினியரிங் சங்கத்தின் புரட்சிகரப் பங்கு

போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க நாட்குறிப்பு தொடர்...கோவை இன்ஜினியரிங் சங்கத்தின் புரட்சிகரப் பங்கு

கோவை மாவட்ட ஜெனரல் இன்ஜி னியரிங் அண்டு மெக்கானிக்கல் தொழிலாளர் சங்கம் ஒரு நூற்றாண்டு கால தொழிற்சங்க வரலாற்றில் பல போராட்டங் களைக் கண்டிருக்கிறது. இச்சங்கத்தின் வளர்ச்சி, கோவை மாவட்ட தொழிற்சங்க இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகத் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றில் ஒரு  மைய அச்சாகத் திகழ்கிறது என்பதை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் அவர்களின் மதிப்பீடு உறுதி செய்கிறது. கோவையின் தொழில் வளர்ச்சிப் பின்னணி பிரிட்டிஷார் கோவையில் 1888-ஆம் ஆண்டிலேயே முதல் பஞ்சாலையான ஸ்டேன்ஸ் மில்லைத் தொடங்கினர். 1938-க்குள் பஞ்சாலைகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. விவசாயத் தொழிலுக்குப் பிரதானமாக இருந்த உழவுக் கருவிகள் செய்யும் பட்டறைகள், பஞ்சாலை இயந்தி ரங்களுக்கான உதிரி பாகத் தேவை அதிக ரித்ததால், இன்ஜினியரிங் தொழிற்சாலை களாக உருவெடுத்தன. 1937-ல் கோவை ஆர்கஸ் நிறுவனம் முதன்முதலில் மோட் டார் இயந்திர உற்பத்தியில் இறங்கியது. இதையடுத்து தண்டாயுதபாணி பவுண்டரீஸ், ராமு பவுண்டரி, பிஎஸ்ஜி இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ், டெக்ஸ்டூல் போன்ற முக்கிய இன்ஜினியரிங் ஆலைகள் உரு வாகி, கோவையைத் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ எனப் பெருமை கொள்ள வைத்தன. சங்கத்தின் உதயம்: கொத்தடிமைத்தனத்திற்கு எதிரான முதல் குரல் முதலாளித்துவம் பிறக்கும் போதே தன்னுடன் நவீன தொழிலாளி வர்க்கத்தை யும் பிரசவிக்கிறது என்கிறார் மாமேதை காரல் மார்க்ஸ். அவ்வாறே தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்பட்டது. அற்ப கூலியே தரப்பட்டது. பிஎஸ்ஜி ஆலையில் குடிக்கத் தண்ணீர் பானை வேண்டும் என்பதே தொழிலாளர்களின் முதல் கோரிக்கையாக இருந்தது. இதற்கு சங்கம் மட்டுமே தீர்வு எனக் கருதிய தொழிலாளர்கள், 1945-இன் இறுதி யில், பஞ்சாலைகளில் சங்கம் அமைத்து  உரிமைகளைப் மீட்டெடுத்த கே.ரமணி, எம்.பூபதி ஆகிய செங்கொடி சங்க தலை வர்களைச் சந்தித்தனர். கார்னேஷன் பூங்காவில் (வ.உ.சி பூங்கா) நடந்த கூட்டத் தில், கோவை ஜில்லா மெக்கானிக்கல் தொழிலாளர் சங்கம் உதயமானது. பி.வி.ராம சாமி, சம்பூர்ணா சின்னசாமி, வேலப்பன், சவுரிபாளையம் கருப்புசாமி ஆகியோர் முதல் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். செங்கொடி சங்கத்தின் முதல் போராட் டமே பிஎஸ்ஜி ஆலையில் எதிரொலித்தது. இதன் விளைவாக, குடிக்க நல்ல தண்ணீர் கிடைத்தது; நியாயமான கூலி, ஓய்வு வயது உயர்வு (55-ல் இருந்து 58 ஆக) போன்ற பல வெற்றிகள் சட்டப் போராட்டங்கள் மூலம் பெறப்பட்டன. போனஸ் என்பது முத லாளிகளின் ‘நட்ட பேச்சை’ நம்பாமல், கம்பெனியின் லாபத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனப் போராடி வெற்றி கண்டனர். இப்போராட்டங்களில் சம்பூ ரணா சின்னசாமி சவுரிபாளையம் இருளப் பன். எம்.ஆர்,நாராயணசாமி கே,ஆறுமுகம் ஸ்ரீராமுலு ஒ,வி வீரப்பன் ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள். பெயர் மாற்றம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான வெற்றி 1952-ஆம் ஆண்டு, கோவை ஜில்லா ஜெனரல் இன்ஜினியரிங் அண்டு மெக்கா னிக்கல் தொழிலாளர் சங்கம் என்ற தற்போ தைய பெயர் பதிவு செய்யப்பட்டது. போலி சங்கங்களால் தொழிலாளர்களின் போராட் டங்களை நசுக்க முடியாது என்பதை செங் கொடி சங்கம் நிரூபித்தது.  தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கான தனி தண்ணீர் குவளை முறை ஒழிக்கப் பட்டது. மாதச் சம்பளம் ரூ.26-லிருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டது. லாபத்தின் அடிப் படையில் போனஸ் கேட்டுப் போராடி, ரூ.1,500 வரை போனஸ் பெற்றுத் தரப்பட்டது. டெக்ஸ்டூல் கம்பெனியில் செங்கொடி சங்கத்தை உருவாக்கி கட்டி வளர்த்த தலை வர்களாக ஏ.கே.வெங்கடேஷ், கே.எஸ்.கருப்பசாமி (திருப்பூர்) சி.என்.கிருஷ்ணசாமி, பி,வீராசாமி உள்ளிட்டவர்கள் தலைவர் களாக உருவாகினார்கள்.  எல்.எம்.டபிள்யூ (பெரியநாயக்கன் பாளையம்) சங்க அங்கீகாரத்திற்காக 1976-77-ல் நடந்த போராட்டத்தில் யு.கே. வெள்ளிங்கிரி, எம்.நஞ்சப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். எம்.ஜி.ஆர். தலையீட்டால் போராட் டம் முடிவுக்கு வந்தது. கே.ரமணி, எம்.பூபதி, டி.பாலன், யு.கே. வெள்ளிங்கிரி, பி.வீராசாமி, எம்.பாஸ்கரன் போன்ற பல தலைவர்களின் தியாகமும் உழைப்பும் இச்சங்கத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன. தோழர் யு.கே.வெள்ளிங் கிரி 1975 முதல் முழுநேர சங்கப் பணியாள ராகப் பொறுப்பேற்ற இவர், டி.பாலனுக்குப் பிறகு 1982 முதல் பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் தொடர்ந்து சங்கப் பணி யாற்றுகிறார். தோழர்கள் பி.வீராசாமி, எம்.பாஸ்கரன்: பி.வீராசாமி நேர்த்தியான முறையில் சங்கக்  கணக்குகளைப் பராமரிப்பதில் சிறப்புப் பெற்றவர்கள். எம்.பாஸ்கரன் தொழில்  தகராறு சட்டங்களை அறிந்து, தொழிலா ளர்களுக்கு சாதகமாக வழக்குகளை முடிப்ப தில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். தொழிற்சங்க இயக்கத்தின் சவால்களும் நம்பிக்கையும் நவீன தாராளமயப் பொருளாதாரம் அமலுக்கு வந்தபின், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடு வதைத் தடுப்பதாகவும், லாபத்திற்கு தொழிலாளர்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்றும் முதலாளித்துவம் கருதுகிறது என சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் வி.  பெருமாள் தெரிவித்தார். மேலும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் அப் ரண்டீஸ் என்ற பெயரில் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. கோவையில் உள்ள எல்ஜிபி ஆலையில் 2008ஆம் ஆண்டு சங்கம் வைக்கக் கோரிய விண்ணப்பத்தில் கூட எந்த முன்னேற்றமும் இல்லை. இப்புதிய சவால்களை எதிர்கொள்ள, கோவையில் நடக்கும் சிஐடியு மாநில மாநாடு புதிய யுத்திகளை வகுக்கும் என்றார். தொழிற்சங்கம் வந்தால் தொழில் நாச மடையும் என்ற கூற்றை மறுக்கும் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி. துரைசாமி, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். சாம் டர்போ கம்பெனியில், நிர்வாகச் சீர்கேட்டால் ஆலை திவாலாகும் நிலை ஏற்பட்டபோது, 286 தொழிலாளர் குடும்பங்கள் பரிதவித் தன. அப்போது தொழிற்சங்கம் முன்வைத்த  ஆலோசனையின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு வேண்டாம், சட்டப்படியான போனஸ் 8.33% போதும் என்று தொழிலா ளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். இதன் விளைவாக, ஆலை மீண்டும் திறக்கப்பட்டு, இன்று 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்க ளுடன் இயங்கி வருகிறது. அரசின் கொள்கை களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்துப் போராடாமல், தங்கள் லாபத்தைப் பாது காக்க அந்தச் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதே முதலாளிகளின் நோக்கம் என்று சாடினார். வலுவான தொழிலாளர் ஒற்றுமையும், நீடித்த போராட்டங்களும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதே கோவை தொழிற்சங்க இயக்கம் நமக்குக் கற்றுத் தரும் பாடம்!. அடுத்த இதழில் ‘எவரெஸ்ட் போராட்டம்’