துாய்மை மிஷன் 2.0 கலக்டிவ் டிரைவ் ஈரோட்டில் ஆய்வு கூட்டம்
ஈரோடு, செப். 13- ஈரோடு மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி தலைமை யில் தூய்மை மிஷன் 2.0 திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை யின் கீழ் ஏற்படுத்தப்பட்ட கிளின் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் என்ற அமைப்பின் தூய்மை மிஷன் 2.0 கலக்டிவ் டிரைவ் துணை முதலமைச்சரால் துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார் பில், தூய்மை மிஷன் 2.0 திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு அலுவலகங்களில் பயனற்ற நிலையில் உள்ள பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்தவும், அந்தந்த துறை அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளார் குறியீடு மற்றும் கடவுசொல்லினை பயன் படுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலு வலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர்(பொது) முகம்மது குதுரத்துல்லா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.