tamilnadu

img

தூய்மைப் பணிகளை தனியாரிடம் விடுவதை கைவிட வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்

தூய்மைப் பணிகளை தனியாரிடம் விடுவதை கைவிட வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல்

ஈரோடு, ஆக. 25- தூய்மைப் பணிகளை தனியாரி டம் விடுவதை கைவிட வேண்டுமென  சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப் புற உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாநாடு வலியுறுத்தப்பட் டது. சிஐடியு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள் ளாட்சி ஊழியர் சங்கத்தின் 18 ஆவது  மாநாடு ஈரோடு மாநகராட்சி திருமண  மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. சங்க தலைவர் எஸ்.சுப்ரமணி யன் தலைமை வகித்தார். ஆர்.மாரி முத்து வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் கே.ரத்தினகுமார் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் வாழ்த்தி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கே.மாரப்பன் நிறைவுரையாற்றினார். இதில், பொது சுகாதாரப் பணி களை தனியாரிடம் விடுவதைக் கைவிட வேண்டும். கோபி, சத்தி,  பவானி, புளியம்பட்டி நகராட்சிகளில் சுகாதாரப் பணிகளை ஒப்பந்த முறை யில் கொடுத்துள்ளதை ரத்து செய்ய  வேண்டும். பணியில் சேர்ந்து 2  ஆண்டுகள் நிறைவடைந்த அனை வரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் என்பதை  காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநாட்டில்,  தலைவராக எஸ்.மாணிக்கம், செய லாளராக எஸ்.சுப்ரமணியன், பொரு ளாளராக ஏ.ஜெகநாதன் மற்றும் 6 பேர் துணைத் தலைவர்களாகவும், 6  பேர் துணைச் செயலாளர்கள் உள் ளிட்ட 33 பேர் கொண்ட கமிட்டி தேர்வு  செய்யப்பட்டது.