tamilnadu

img

கிட்னி திருட்டு ஏஜென்டுகளை கைது செய்யக்கோரி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிட்னி திருட்டு ஏஜென்டுகளை கைது செய்யக்கோரி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப்.1 - விசைத்தறி தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தவும், வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி திருப் பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குழுக் காப்பீடு திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும், விசைத்தறி உரிமையாளர் சங்கங்களையும், தொழிற்சங்கங்களையும், அரசு நிர் வாகம் நேரில் அழைத்துப் பேசி சம் பள உயர்வு ஒப்பந்தத்தை உடனடி யாக ஏற்படுத்த வேண்டும். விசைத் தறி தொழிலாளர்களுக்கு 8 மணி  நேர வேலை என்பதை உறுதிப்ப டுத்த வேண்டும். தொழிலாளர்க ளுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., வீட்டு மனை, பட்டா, இலவசமாக வீடு  கட்டித் தர வேண்டும், மக்கள் பிரச்ச னையை பின்னுக்கு தள்ளி, வகுப்பு வாத இந்துத்துவா சக்திகளை, அம் பலப்படுத்தி, மக்கள் ஒற்றுமையை பலப்படுத்தி, தொழிலாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும், விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு நலவாரிய பயன்கள் தடை யில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய் வதைத் தடுக்க நடவடிக்கை எடுக் கவும், கந்து வட்டிக்கு எதிரான சட் டத்தை அமல்படுத்தி உயிர்களைப் பாதுகாக்க வேண்டும்,  கிட்னி விற்பனை என்பது ஒரு  சமூகப் பிரச்சனையாக உருவெடுத் துள்ளது. இதை கவனத்தில் கொண்டு, கிட்னி ஏஜென்ட்களை உடனடியாக கைது செய்து, கிட்னி விற்பனையை தடுத்து நிறுத்தி, கிட்னி கொடுத்தவர்களுக்கு மருத் துவ உதவி மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என சிஐடியு கோரி வருகிறது. இந்த கோரிக்கைகளை முன் வைத்து திருப்பூர் மாவட்டத்தில், வஞ்சிபாளையம் பேருந்து  நிறுத்தம், மங்கலம், கருணைபா ளையம் பிரிவு, பல்லடம், இடுவாய்  பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங் களில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வஞ்சிபாளை யம், மங்கலம் உள்ளிட்ட பகுதிக ளில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பல்லடம் பகுதியில் சிஐ டியு மாவட்ட தலைவர் சம்பத், இடு வாய் பகுதியில் சிஐடியு மாவட்ட  துணை தலைவர் பாலன், கரு ணைபாளையத்தில் மாவட்ட பொருளாளர் கந்தசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மேலும்  மங்களம், வஞ்சிபாளையம், சோம னூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ் நாடு விசைத்தறி தொழிலாளர் சம் மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்துசாமி விளக்க  உரையாற்றினார். இதில் அமைப் பின் மாவட்ட தலைவர் வேலுச்சாமி,  மாவட்ட பொருளாளர் முருகன்,  மாவட்டத் துணைத் தலைவர்கள் சாமியப்பன், ஈஸ்வரன், தங்க வேல், மாவட்டச் செயலாளர்கள் பழனிச்சாமி, குப்புசாமி, மணி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.