tamilnadu

ஒப்புக்கொண்டபடி ஊதியம் மற்றும் போனஸ் வழங்க சிஐடியு கோரிக்கை

ஒப்புக்கொண்டபடி ஊதியம் மற்றும் போனஸ் வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், அக்.24- ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது ரூபாய் ஆறாயிரம் போனஸ் வழங்குவதாகக் எஸ்டபுள்யுஎம்எஸ் நிறுவனம் ஒப்பு கொண்டது. ஆனால் பல ஊழியர்க ளுக்கு குறைத்து வழங்கி உள்ளனர். எனவே ஒப்புக்கொண்டபடி ஊதியம் மற்றும் போனஸ் வழங்கக்கோரி மாநக ராட்சி மேயர் மற்றும் ஆணையாளர்  ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது,  திருப்பூர்  மாநகராட்சியில், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 9,10,11 தேதிகளில் வேலை நிறுத்தம் நடந்தது. இதில் சுமூகமான தீர்வு காண மேயர் மற்றும் துணை மேயர் எஸ்டபுள்யுஎம்எஸ் (SWMS) அவுட்சோர்சிங் நிறுவனத்தை வர வழைத்து பேசினர். இதில், இந்த ஆண்டு  போனசாக ரூ.6000 தூய்மை பணியாளர்  உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கு வது. இம்மாதத்தில் இருந்து தூய்மைப்  பணியாளர்களுக்கு ரூ.613 ஓட்டுநர்க ளுக்கு ரூ.867 தினசரி ஊதியமாக வழங் குவது. இம்மாதத்தில் இருந்து சம்பள ரசீது வழங்குவது. பி.எப்.  பிடித்தங்களை முறைப்படுத்த மண்டல  வாரியாக, தொழிலாளர்களை அழைத்து முகாம் நடத்துவது. என இரு  தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.  இந்நிலையில், எஸ்டபுள்யுஎம்எஸ் (SW MS) நிர்வாகம் ஒப்புக்கொண்ட ரூ.6000 வழங்காமல் பல ஊழியர்களுக்கு குறைத்து வழங்கி உள்ளனர். மேலும், 4 மண்டலங்களிலும் உள்ள  குடிநீர் பணி ஒப்பந்த நிறுவனங்கள்  குடிநீர் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய மாத ஊதியத்தை வழங்கா மல் குறைவாகவே வழங்கி வருகின்ற னர். கடந்த ஆண்டு ரூ.6000 போனஸ்  வழங்கப்பட்டது. 2 ஆவது மண்டல ஒப் பந்த நிறுவனம் இந்த ஆண்டு போனஸ்  வழங்குவதில் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது. 1 மற்றும்  2 ஆவது மண்டலத்தின் (ஒருபகுதி) ஒப் பந்த நிறுவனம் ரூ.3000 மட்டுமே வழங்கி யது. 3 ஆம் மண்டல ஒப்பந்த நிறுவனம்  ரூ.3000 மட்டுமே வழங்கியது. 4ஆம்  மண்டல ஒப்பந்த நிறுவனம் இதுவரை  போனஸ் தொகை ஏதும் வழங்க வில்லை. இது குடிநீர் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப டுத்தியுள்ளது. எனவே, மாத ஊதி யத்தை அதிகப்படுத்தி வழங்குவது டன், 2 ஆம் மண்டலத்தில் போனஸ்  வழங்கியதை போல ஒரு மாத ஊதி யத்தை மற்ற நிறுவனங்களும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்த குடி நீர் பணியாளர்களுக்கு வங்கிக் கடன்  உள்ளிட்ட பலவற்றிற்கு ஊதிய ரசீது  தேவைப்படுகிறது. எனவே ஊதிய ரசீது  வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.