tamilnadu

img

நீர்ப்பாசன திட்டப் பணியில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நினைவரங்கத்தை முதல்வர்

நீர்ப்பாசன திட்டப் பணியில் உயிரிழந்த   தொழிலாளர்களுக்கு நினைவரங்கத்தை முதல்வர் 

பொள்ளாச்சி, ஆக.11- பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப் பாசனத் திட்டம் உருவாகி 3.77 லட் சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறு வதற்கு காரணமாக இருந்த 4 தலை வர்களின் உருவச் சிலைகள் மற்றும்  நீர்ப்பாசன திட்டப்பணியில் உயிரி ழந்த தொழிலாளர்களின் நினை வாக கட்டப்பட் நினைவரங்கத்தை திங்களன்று பொள்ளாச்சியில், முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை யில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கும் நீரைத்  திருப்பி, தமிழ்நாட்டில் கோவை,  திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக் கும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் சித்தூர் தாலுகாவுக் கும் விவசாய நிலங்களுக்கு பாசன  வசதி அளிப்பதுடன், பொதுமக்க ளின் குடிநீர் ஆதாரமாகவும் பிஏபி  திட்டம் இருந்து வருகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ் ஆனை மலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு, ஆழியாறு, பாலாறு ஆகிய 8 ஆறு களின் குறுக்கே 10 அணைகள் கட்ட  திட்டமிடப்பட்டு 9 அணைகள் கட்டப் பட்டன. இந்த ஆறுகளின் நீரை சுரங் கங்கள், கால்வாய்கள் மூலம் ஒன்றை ஒன்று இணைத்து அதில் சேகரமாகும் நீரை தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 30.05 டிஎம்சியும், கேர ளத்துக்கு 19.55 டிஎம்சியும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்தத் திட் டத்தின் மூலம் தற்போது சுமார் 3.77  லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பிஏபி பாசனத் திட்டத்தை செயல்படுத்த உழைத்த, முன் னாள் முதல்வர் கே.காமராஜர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் மேலவை உறுப்பினர் வி.கே.பழனி சாமி, பொள்ளாச்சி முன்னாள் எம்எல்ஏ நா.மகாலிங்கம் ஆகியோ ருக்கு உருவச் சிலை அமைக்கப்ப டும் என்றும் பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்துக்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டப்ப டும் என்றும் தமிழக அரசு அறி வித்திருந்தது. அதன்படி, தலைவர்களின் சிலை திறப்பு விழா பொள்ளாச்சி யில் நடைபெற்றது. இதில், முதல் வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமைப் பொறியாள ரின் அலுவலகமான சி.சுப்பிரமணி யம் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கே.காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரின் உரு வச் சிலைகளைத் திறந்து வைத் தார். மேலும், பிஏபி பாசனத் திட்டப் பணியின்போது நடைபெற்ற விபத் தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழி யாறு அணைப் பூங்காவில் ரூ.2.83  கோடி மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள நினைவு மண்டபத்தை யும் நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.  பின்னர், வி.கே.பழனிசாமி அரங் கில் அமைக்கப்பட்டுள்ள பிஏபி திட் டப் பணிகள் தொடர்பான புகைப் படக் கண்காட்சியையும் முதல்வர்  திறந்து வைத்துப் பார்வையிட்டார்.