திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டத்தில் அமளி
அவிநாசி, ஆக 25 – திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டத்தில் சமமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நகர மன்ற உறுப் பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் திங்களன்று, நகர்மன்றத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜேஸ்வரி, புதிதாகப் பொறுப்பேற்ற பொறியாளர் ராமசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நக ராட்சி ஆணையர் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது சல சலப்பை ஏற்படுத்தியது. காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்ற நகர்மன்ற சாதாரணக் கூட்டத்தில் 30 மன்றப் பொருட் கள் (தீர்மானங்கள்) முன்வைக்கப்பட்டு, அதன் மீது நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த னர். இக்கூட்டத்தில் 8 மன்றப் பொருட்கள் அவசரமாக முன்வைக்கப்பட்டன. அப்போது, திமுக நகர்மன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டும் அவசரக் கூட் டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மன்றப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து நகர் மன்ற தலைவர் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் நகர் மன்ற உறுப்பினர் சுப்ரமணி யம், தேவராஜன், சிபிஐ நகர்மன்ற துணைத் தலைவர் ராஜேஸ்வரி உட்பட ஆறு நகர்மன்ற உறுப்பினர்க ளும், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் உட்பட 14 உறுப் பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறுப் பினர்களிடம் நகர்மன்றத் தலைவர் குமார் பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்து நகர்மன்ற உறுப்பினர் களின் வார்டுக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தங் கள் போராட்டத்தைக் கைவிட்டு, அவரவர் இருக்கைக ளுக்குச் சென்றனர்.