tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள்

அவிநாசி, அக்.15- அரசு மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் அனு மதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் மற்றும் தனியார் நிறுவன கேபிள்களை உடனடியாக அகற்ற வேண் டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய அவிநாசி செயற்பொறியாளர் பரஞ்சோதி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்குட்பட்ட அவிநாசி கோட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு மின் விநியோகம் வழங்கிட நிறைய உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்  கம்பங்களும், மின்மாற்றிகளும் பயன்பாட்டில் இருந்து  வருகின்றன. மின்வாரிய ஊழியர்கள் மற்றும் டான்பினெட்  (TANFINET Tamil Nadu Fiber Network) முதலான துறை  சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே பராமரிப்பு பணி நிமித்த மாக இவற்றில் ஏற இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு நபர்கள் ஏறினால் அது தண்டனைக் குரிய குற்றமாகும். இந்நிலையில், மின் கம்பங்களில் தனி யார் பணியாளர்கள் சிலர், சட்டவிரோதமாக ஏறி அவற்றில் தங்களின் நிறுவன விளம்பர பதாகைகள் மற்றும் கேபிள் வயர்கள் கட்டியிருப்பது தெரியவருகிறது. இதுபோன்ற செயல்களால், மின் பகிர்மான கழக பணியாளர்களுக்கு பணியின் போது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதோடு ஊழி யர்களுக்கும், பொதுமக்களுக்கும் விபத்து மற்றும் விலை மதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட வழி வகுப்பதாக அமை கிறது. எனவே, அவிநாசி கோட்டத்திற்குட்பட்பட்ட பகுதியி லுள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் சட்டத் திற்கு புறம்பாக விளம்பரப் பதாகைகள், அனுமதியற்ற  கேபிள்வயர்கள் எதனையும் கட்டக்கூடாது. ஏற்கனவே  கட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் மற்றும் கேபிள்  வயர்களை மின்பகிர்மான கழக ஊழியர்களின் துணை யோடு உடனடியாக அகற்றப்பட வேண்டும். தவறும் பட் சத்தில் சட்ட ரீதியாக துறை சார்ந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்

உதகை, அக்.15- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டாரம், தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம், அரசு ரோஜா பூங்காவிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் பயிற்சி நிலையத்தில் புதனன்று வட்டார அளவிலான விவ சாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தோட்டக் கலை துணை இயக்குநர் நவநீதா தலைமை வகித்து, தோட்டக்கலைத்துறை சார்பான திட்டங்கள் குறித்து சிறப்பு ரையாற்றினார். மேலும், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,  உதகை மண் பரிசோதனை நிலையம் மற்றும் வேளாண்மை  வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வேளாண்மை பொறியி யல் துறை, போன்ற அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினர். விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, தீர்வுகள் காணப்பட்டது. இந்நிகழ்வில், தோட்டக்கலை உதவி இயக்கு நர் (அலுவலக திட்டம்) ஜெயக்குமார், தோட்டக்கலை உதவி அலுவலர் ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

கால்நடை சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம்

சேலம், அக்.15- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொத்தாம்பாடி கல்ப கனூர் கால்நடை சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கல்பகனூரில் புதன்கிழமை வார சந்தை, தினசரி மார்கெட் மற்றும் கால்நடை சந்தை கடந்த நான்கு வாரத்திற்கு முன்பு  திறக்கப்பட்டது. இந்நிலையில், வருகின்ற திங்களன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம், மங்களபுரம், ராசிபுரம் கருமந்துறை, பேளூர், வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம். மஞ்சினி, மல்லியகரை, தம்மம்பட்டி, தலைவாசல் அயோத்தியபட்டினம், கூட்டாத்துப்பட்டி உள் ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால் நடை களான கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, தலச்சோரி ஆடு, வேலி¬ ஆடு, செம்மறி ஆடு, ஆந்திர ஆடு, போயர் ஆடு  என பல்வேறு வகையிலான ஆடுகள் மற்றும் காங்கேயம் நாட்டு மாடு, சிந்து மாடு, கன்றுகள் மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை  செய்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற் பனை நடைபெற்றதில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதனன்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரி கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனை நடை பெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இளம்பெண்ணை கடத்த முயற்சி கோவில் பூசாரிகள் மீது வழக்கு

கோவை, அக்.15- வீட்டிற்குள் புகுந்து இளம் பெண்ணை கடத்த முயற்சி செய்த கோவில் பூசாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், வடவள்ளி அடுத்த கஸ்தூரி நாயகன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி  நிகாரிகா (26) மற்றும் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடந்த 7 ஆம் தேதியன்று இரவு வீட்டில் நிகாரிகா குடும்பத் தோடு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டு உள்ளது. உடனே நிகாரிகா கதவை திறந் துள்ளார். அப்போது உக்கடத்தை சேர்ந்த பிரவீன்குமார், கிருஷ்ணவேணி, ஹரி பிரசாத் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் கும்பலாக  நிகாரிகாவை தள்ளி விட்டு வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிகாரிக்கா சத்தம் போடத் துவங்கினார். அப்போது அவர்கள் நிகாரிக்காவின் கணவர் விஜய் எங்கே என வீட்டிற்குள் உள்ள அறைகளில் சென்று  தேடி உள்ளனர். விஜய் ஏற்கனவே நிகரிகாவின் தங்கை வர்ஷா  பெயரில் பைனான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக அவர்கள் கூறி தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்துள் ளனர். பிறகு வீட்டில் இருந்த நிகாரிகாவின் தங்கை வர்ஷாவை அவர்கள் கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சித்தனர். உடனே நிகாரிகா காவல் துறைக்கு போன் செய்வதாக சத்தம் போட்டு உள்ளார். உடனே அந்த நபர்கள் நிகாரிகாவை கீழே தள்ளி விட்டு அங்கு இருந்து காரில் தப்பிச் சென்றனர். இது குறித்து  நிகாரிகா வடவள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணவேணி, வடவள்ளி லிங்க னூர் கருப்பராயன் கோவில் பூசாரி பிரவீன் குமார், சிவன் கோவில் பூசாரி ஹரி பிரசாத் உள்ளிட்ட 3 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.