tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தடையில்லா சான்று வழங்க லஞ்சம்! தனி வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது

சேலம், செப்.24- தடையில்லா சான்று வழங்க, லஞ்சம் வாங்கிய தனி  வட் டாட்சியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மூலப்பாதை பகு தியைச் சேர்ந்தவர் தமிழரசன் (55), விவசாயி. இவருக்கு மூலப்பாதையில் 13 சென்ட் நிலத்தில் 3 சென்ட் ஓமலூர் -  திருச்செங்கோடு வழிச்சாலை அமைக்கும்போது நில எடுப்பு பணி வழங்கிய நிலையில் இழப்பீட்டு தொகை வழங்கப் பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நிலத்தின் மீது கடன் பெற வேண்டி மகுடஞ்சாவடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கடன் பெற நிலம் எடுப்பு வட்டாட்சியரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என  கூறியுள்ளார்.  இதுதொடர்பாக, நிலத்தை அளந்து பார்த்து தடை யில்லா சான்று வழங்க, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் கோவிந்த ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தடையில்லா சான்று வழங்க தனி வட்டாட்சியர் ரூ.15 ஆயிரம்  லஞ்சம் கேட்ட தாக கூறப்படுகிறது. பின்னர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க  தமிழரசன் ஒப்பு கொண்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க  விருப்பம் இல்லாததால், சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவ லகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் புதனன்று ரசா யனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தமிழரசுனிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை எடுத்துக் கொண்டு தமிழர சன், தனி வட்டாட்சியரிடம் சென்ற நிலையில், பணத்தை  எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி  வரும் வெங்கடாசலத்திடம் தருமாறு தெரிவித்தார். அதன் படி, தமிழரசன் எடப்பாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் வெங்க டாசலத்திடம் ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் வெங்கடாசலத்தை கையும் காலமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி வட் டாட்சியர் கோவிந்தராஜுயிடம் விசாரணை செய்த நிலையில், அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

நாளை வரை குடிநீர் நிறுத்தம்

திருப்பூர், செப்.24- திருப்பூர் 4 ஆவது குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு  வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால், வெள்ளி யன்று (நாளை) வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படு வதாக மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் தெரிவித்துள் ளார். மேட்டுப்பாளையம் காரமடை பிரிவு நால் ரோடு அருகில் 1400 எம்எம் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, புதனன்று முதல் வெள்ளியன்று (நாளை) வரை குடி நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.