tamilnadu

img

வட்டாட்சியரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி

வட்டாட்சியரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி

ஈரோடு, ஆக.20- அந்தியூர் வட்டாட்சியரை கண்டித்து பொய்யேரிக்கரை குடியிருப்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத் திற்குட்பட்ட பொய்யேரிக்கரை பகுதியைச் சேர்ந்த மக்கள், அரசு புறம்போக்கு நிலத் தினை மயானமாகப் பயன்படுத்தி வந்தனர்.  உயிரிழப்புகள் நிகழும் போது, சடலத்தைப் புதைக்க மயானத்திற்குச் சென்றால், காவல் துறையினர் தடுப்பதுடன் வழக்குகள் பதிவு செய்கின்றனர். தனிநபர் ஒருவர் உயர்நீதி மன்றத்தில் பெற்றுள்ள ஆணையால், இது போன்று வழக்குகள் பதிவு செய்யப்படுகின் றன. அதேசமயம் அப்பகுதியில் அவர் கிணறு  வெட்டி விவசாயம் செய்து வருகிறார். இத னைக் கண்டு கொள்ளாத வட்டாட்சியர் கிராம  மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து  போராட்டத்திற்கு தயாரான நிலையில், கிராம  நிர்வாக அலுவலர் வாயிலாக இம்மாதம் 19  ஆம் தேதியன்று நில அளவை செய்யப்ப டும் என அறிவிக்கப்பட்டது. இதனால்  போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள் ளப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டது போல் 19 ஆம் தேதியன்று அளவிடும் பணி  நடைபெறவில்லை. எனவே பாதிக்கப்பட்ட  மக்கள் செவ்வாயன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.