tamilnadu

திருப்பூரில் பனியன் ஊழியர் தற்கொலை அத்துமீறிய உரிமையாளர்: காவல்துறை அலட்சியம்!

திருப்பூரில் பனியன் ஊழியர் தற்கொலை

அத்துமீறிய உரிமையாளர்: காவல்துறை அலட்சியம்!

திருப்பூர், ஜூலை 16–  பனியன் துணி திருடியதாக ஊழியரை அடித்து இடத்தை எழுதி வாங்கிய கம்பெனி உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் ஊழியர் ஒரு வர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருப்பூர் குமார் நகர் வ.உ.சி முதல் வீதியில் வசித்து வந்தவர் கே.தயாளன் (38). இவரது மனைவி ஆர்.கோமதி (35). இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திரும ணம் முடிந்து நிறைமதி (7) என்ற  பெண் குழந்தை உள்ளது. தயாளன் குமார் நகரில் உள்ள ஜெட்டா பேஷன் என்ற பனியன் கம்பெ னியில் பேப்ரிக் இன்சார்ஜ் ஆக கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.  கடந்த 3ஆம் தேதி இவரது மனைவி கோமதிக்கு ஜிட்டா பேஷன் உரிமையாளர் மிதுன் என்ப வரின் மனைவி ரஞ்சிதா, செல்போ னில் தொடர்பு கொண்டு, உனது கணவர் கம்பெனியில் பனியன் ரோலை எடுத்து விற்று விட்டார். எனவே கணவரை அழைத்துக் கொண்டு கம்பெனிக்கு வா என்று அழைத்துள்ளார். இருவரும் கம் பெனிக்குச் சென்றபோது, மிதுன், ரஞ்சிதா மற்றும் ஐந்து பேர் சூழ்ந்து  கொண்டு தயாளனின் செல்போனை பறித்துக் கொண்டு துணி திருடி யது குறித்து விசாரித்தனர். தயாள னும் துணி திருடி விற்றதை ஒப்புக் கொண்டதாகவும், கம்பெனியில் முறையாக சம்பளம் தராததால்  இது போல் செய்ததாகக் கூறியுள் ளார். இதையடுத்து அங்கிருந்த கும் பல் அவரை சாதியைச் சொல்லி  இழிவாகத் திட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதை செல்போ னிலும் பதிவு செய்துள்ளனர். சிசி டிவி காட்சியும் பதிவாகி உள்ளது.  நிலத்தை எழுதி வாங்கினர் கணவரைத் தாக்குவதை தடுக்க முற்பட்ட கோமதியை மிரட்டி வெளியே நிறுத்தியுள்ளனர். பின் னர் தயாளனின் அம்மா பெயரில் பொங்கலூர் கிராமத்தில் உள்ள இரண்டே கால் சென்ட் இடத்தை எழுதித் தருவதாக ஒரு தாளில் எழுதி வாங்கிக் கொண்டு, நல்ல முறையில் அழைத்துச் செல்வதாக வும் கோமதியிடம் கையெழுத்துப் பெற்றனர். மறுநாள் 4 ஆம் தேதி தயாளனின் அம்மா பெயரில் இருந்த நிலப் பத்திரத்தை அடமா னத்தில் இருந்து ரூ.17 ஆயிரம்  கொடுத்து மீட்டு, ரஞ்சிதாவின் அப்பா பெயருக்கு வலுக்கட்டாய மாக எழுதி வாங்கிக் கொண்டனர். கோமதியிடமும், தயாளனின் அப்பாவிடமும் சாட்சி்க் கையெ ழுத்துப் பெற்றனர். இதற்குப் பிற கும் கம்பெனிக்கு அழைத்து அடித்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ள னர். நிலத்தை எழுதி வாங்கிக் கொண்ட பிறகும் இப்படிச் செய் வதா என்று தயாளனின் அம்மா, அடிக்க வேண்டாம், காவல் நிலை யத்தில் கூட புகார் கொடுங்கள், எங் களை விட்டு விடுங்கள் என்று பனி யன் கம்பெனி உரிமையாளரிடம் கெஞ்சி இருக்கிறார். ஆனால் மிரட் டல் விடுத்த மிதுன் மீண்டும் 5ஆம் தேதி வர வேண்டும் என கட்டாயப் படுத்தியுள்ளார். ஆணையரிடம் புகார் இந்நிலையில், மன உளைச் சல் தாங்காமல் தயாளன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். நடந்த சம்பவங் களை கோமதி, திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 8ஆம்  தேதி செவ்வாய்க்கிழமை புகார் கொடுத்திருக்கிறார். சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி அடித்து சித் ரவதை செய்து மீண்டும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று புகார் கொடுத்தி ருக்கிறார். எனினும் கடந்த ஒரு வார காலமாக புகார் குறித்து காவல் துறையினர் குறைந்தபட்சம் விசாரிக்கக்கூட இல்லை என்று தெரிகிறது. பனியன் நிறுவன உரிமையாளர் மிதுன், அவரது மனைவி ரஞ்சிதா உள்ளிட்டோரை விசாரிக்கவில்லை.  தற்கொலை இந்நிலையில், தயாளன் செவ் வாயன்று இரவு மதுவில் விஷம்  கலந்து குடித்து தற்கொலை செய்து  கொண்டார். அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தினர் தயாளன் சடலத்தைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனையில் உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறை யின் அலட்சியப் போக்கினால் ஒரு வர் உயிர் பறி போய் இருக்கிறது. அவரது தாய் பெயரில் இருந்த நிலத்தையும் பறித்துள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கொடுத் தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.