வங்கி கடனை திருப்பி செலுத்த கால அவகாசம்: ஏற்றுமதியாளர்கள் நிதி அமைச்சரிடம் கோரிக்கை
திருப்பூர், செப்.2- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வங்கி கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் தமிழகத்தைச் சார்ந்த பல் வேறு தொழில்துறையினருடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வா யன்று கலந்துரையாடினார். இந்நிகழ்வில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், திருப்பூர் ஏற்றுமதியா ளர்கள் சங்கத்தினர் அமைச்சர் நிர்மலா சீதா ராமனிடம் அளித்த மனுவில், திருப்பூரில் பின்னலாடை துறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2024-25 ஆம் நிதி ஆண்டில் சுமார் ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது. இதில் 30 முதல் 35 சதவீ தம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. தற்போது அமெரிக்க வரி விதிப் பால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று நோய் காலத்தில் ஒன்றிய அரசு வழங்கிய சிறப்பு நிதி உள்ளிட்ட சலுகை களை தற்போதைய நெருக்கடியில் இருந்து திருப்பூர் தொழில்துறையைப் பாதுகாக்க வழங்க வேண்டும். டியூட்டி டிராபேக் சதவீதம் உயர்த்துதல், ஏற்றுமதியாளர்கள் வங்கி கடன் திருப்பிச் செலுத்துவதில் கால அவகா சம், ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை, ஏற்றுமதி வாய்ப்புள்ள மற்ற சந்தைகளை உருவாக்கு தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை யும் வலியுறுத்தினர்.