சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கடத்த முயற்சி: 7 பேர் கைது
கோவை, செப்.26– சூலூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பெண்ணை கடத்த முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அந்தக் கல்லூரி யில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றும் இளைஞருக்கும் இந்தப் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்ப டுகிறது. இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவரும், உள்ளூரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என அஞ்சி, சூலூர் அருகிலுள்ள முத்துகவுண்டன் புதூரில் வாடகை வீடு எடுத்து தனியாக தங்கி வசித்து வந் துள்ளனர். இங்கிருந்து இளைஞர் ஓட்டுநர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், வியாழனன்று மாலை, இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், இந்த தம்பதியினர் தங்கி யிருந்த வீட்டைக் கண்டுபிடித்து வந்துள்ளனர். பின்னர், திருமணமான பெண்ணை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். பெண் சம்மதிக்க மறுத்ததால், அவரை கடத்த முயற்சித்துள்ளனர். அப்போது பெண் உடன டியாக வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்ட தாகக் கூறப்படுகிறது. அதன்பின், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடித்து உடைக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூடி சூலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சூலூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையிலான போலீசார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
1.7 டன் ரேசன் அரிசி பறிமுதல்
ஈரோடு, செப்.26- கவுந்தப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் 1.7 டன் ரேசன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, பெரியபுலியூர் பகுதியில் ரேசன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வா ளர் மேனகா தலைமையிலான போலீசார் வியாழனன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழி யாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் 1,700 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்லப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் ஓட்டு நரான, பவானி பகுதியைச் சேர்ந்த தீர்த்தகிரி (56) என்பவரை கைது செய்து, ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பெண் காவல் ஆய்வாளர் விபத்தில் பலி
கோவை, செப்.26- மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் பானுமதி (52). இவர், வெள்ளியன்று காலை சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரிசி மூட்டைகள் ஏற்றிய ஈச்சர் வாக னம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் படுகாய மடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பானுமதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். பானுமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வா ளர் பானுமதியின் திடீர் மறைவு, காவலர்கள் மற்றும் அவ ரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
மின்னல் தாக்கி கூரை வீடு சேதம்
தருமபுரி, செப்.26- நல்லம்பள்ளி அருகே மின்னல் தாக்கி கூரை வீடு சேத மடைந்த சம்பவம் அப்பகுதியினடையே பதற்றத்தை ஏற்ப டுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த கமல் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (35). திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் இவருக்கு சொந்த மான கூரை வீட்டில் ஆடுகள், மாடுகள் மற்றும் ரேடியோ செட் அமைப்பதற்கு தேவையான பொருள்களை வைத்தி ருந்தார். இந்நிலையில், வியாழனன்று இரவு மழை பெய்த போது, கூரை வீட்டின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்தது. அப் போது கூரை வீட்டில் கட்டியிருந்த ஆடு, மாடுகள் தப்பி ஓடியது. ஆனால் எல்இடி விளக்குகள், பாத்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து வரு வாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி கூரை வீடு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.