வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தல்? காவல் நிலையத்தில் மனைவி புகார்
நாமக்கல், செப்.5- பள்ளிபாளையம் ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலகராக பணி யாற்றி வந்தவர் காணாமல் போய்விட்டதாகக்கூறி, அவ ரது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக நாமக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து, பணி யிட மாற்றமாக பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணமாகி யசோதா என்ற மனைவியும், ஹர்ஷினி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலை யில், வியாழனன்று வழக்கம்போல் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற பிரபாகரன், இரவு 9 மணி வரை பணியில் இருந்துள்ளார். இதன்பின் புறப்பட்டவர் வீட்டிற்கு செல்ல வில்லை. அவரது மனைவி யசோதா பலமுறை தொடர்பு கொண்டும், அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித் தும் தகவல் கிடைக்காத நிலையில், யசோதா பள்ளிபாளை யம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் பிரபா கரனை தேடி வருகின்றனர். மேலும், அவர் கடத்தப்பட் டாரா? அல்லது மன அழுத்தத்தின் காரணமாக வெளியில் சென்று உள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.