tamilnadu

img

அரசு கலைக்கல்லூரியில் பழங்கால நாணயக் கண்காட்சி

அரசு கலைக்கல்லூரியில் பழங்கால நாணயக் கண்காட்சி

நாமக்கல், செப்.24- ராசிபுரம் கலைக் கல்லூரியில் பழங்கால நாணயக் கண்காட்சி ஏராளமான மாணவ, மாண வியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு நாணயங் களை பார்வையிட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளு வர் அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை கட்டி டத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு தினங் களாக பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடை பெற்றது. ராசிபுரம் துணை தாசில்தார் ஸ்ரீதரன் கலந்துகொண்டு நாணயங்கள் கண்காட்சியை துவங்கி வைத்தார். வித்யா மந்திர் பள்ளி தாளா ளர் வழக்கறிஞர் பூபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் சிவகுமார் தலைமை தாங்கினார்,  வரலாற்றுத் துறை பொறுப்பு துறைத் தலைவர் முனைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சேலம் பாராமஹால் நாணய சங்க உறுப்பினரும், சிபிஎம் உறுப்பினருமான வெங் கடாசலம் ஏற்பாட்டில் இந்திய மற்றும் சர்வதேச அரிய பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டு கள், ஓலைச்சுவடிகள் கண்காட்சிக்கு வைக்கப் பட்டது. வரலாற்று பொக்கிஷமான அச்சு நாணயங் கள், குப்த சுல்தானிய முகலாய பிரிட்டிஷ் கிழக் கிந்திய கம்பெனி நாணயங்கள், தமிழகத்தின் சோழர் நாயக்கர் நவாபுகள், ஹைதர் அலி திப்பு  சுல்தான் நாணயங்கள் மாணவ, மாணவியரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு முன் மற்றும் சுதந்திரத்திற்கு பின் வெளியிட்ட அரிய நாணயங்கள் காட்சிக்கு  வைக்கப்பட்டன. இதில் கல்லூரி மாணவ, மாண விகள் கலந்து கொண்டு பார்வையிட்டு வரலாற் றின் தொன்மையும் சிறப்புகளையும் அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை முனைவர் வெ.பிரபாகரன் ஒருங்கிணைத்தார். பலர் கலந்து கொண்டனர்.