tamilnadu

குறுவள மைய அளவில் கலைத்திருவிழா அம்மாபாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை

குறுவள மைய அளவில் கலைத்திருவிழா  அம்மாபாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை

திருப்பூர், ஆக. 28 - திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம்  பெரியாயிபாளை யம் குறுவள மைய அளவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாண வர்களுக்கு “பசுமையும், பாரம்பரியமும்” என்ற தலைப்பில் கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடு நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டியில் 13  பள்ளிகளை சேர்ந்த  320 மாணவ, மாணவிகள் தனி மற்றும்  குழு என 18  வகையான போட்டிகளில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தப் போட்டியில் திருமுருகன்பூண்டி நகராட் சிக்குட்பட்ட  அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12 போட்டிகளில் பரிசு பெற்று சாதனை படைத் தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருப் பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுந்தரம்,  பழனிசாமி, சக்கரபாணி ஆகியோர் கேடயம் பரிசுகளை வழங்கினர்.