tamilnadu

அமெரிக்காவின் அடாவடி வரிவிதிப்பு: இடதுசாரிகள் ஆவேசம்

அமெரிக்காவின் அடாவடி வரிவிதிப்பு: இடதுசாரிகள் ஆவேசம்

கோவை, செப்.5– இந்திய பொருட்களுக்கு அமெ ரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50  சதவிகித வரிவிதிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் வெள்ளியன்று ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அரசு இந்திய பொருட் களுக்கு 50  சதவிகித வரியை விதித் துள்ளது. இதன்காரணமாக, உற் பத்தி மாநிலங்களாக உள்ள தமிழ கம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது. உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு உள்ளிட்ட அபா யம் உள்ளதாக இடதுசாரி கட்சி கள், பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெ ரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அடா வடியான வரிவிதிப்பை கண்டித்து  தமிழகத்தில் 13 தொழில் நகரங்க ளில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) லிபரேசன், விசிக உள்ளிட்ட கட்சி கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டி ருந்தது. இதன்ஒருபகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளா ளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித் தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், சிபிஐ மாவட்டச் செயலா ளர் சி.சிவசாமி உள்ளிட்ட நிர்வா கிகள், சிபிஐ (எம்எல்) லிபரே சன் மாவட்ட செயலாளர் ஏ.பால சுப்ரமணியம், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை சேது உள் ளிட்டோர் உரையாற்றினர். திரளா னோர் பங்கேற்றனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ் வரமூர்த்தி தலைமை ஏற்றார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் சி.மூர்த்தி, சிபிஐ புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் நதியா, சிபிஐ (எம்எல்) லிபரேசன் நிர்வாகி மாணிக்கம் உள்ளிட்டோர் உரையாற்றினார். ஈரோடு இதேபோன்று, ஈரோடு வீரப் பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஐ (எம்எல்) லிபரே சன் மாவட்ட அமைப்பாளர் ஜெ.பி. கார்த்திகேயன் தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் ப. மா.பாலமுருகன் (வடக்கு), ஜி.கல் யாணசுந்தரம் (தெற்கு), சிபிஐ  (எம்எல்) லிபரேசன் திருப்பூர் மாவட் டச் செயலாளர் கே.முத்துகிருஷ் ணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், பெருந்திரளா னோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் பி.டில்லிபாபு, சிபிஐ மாவட் டச் செயலாளர் க.அன்புமணி, சிபிஐ  (எம்எல்) லிபரேசன் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரளானோர் பங்கேற்றனர்.