விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு
நாமக்கல், ஜூலை 15- விவசாயத் தொழிலாளர் சங்க பள்ளிபாளையம் ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றிய 5 ஆவது மாநாடு அண்மையில் சண்முகம், வி.பி.சிந்தன் ஆகியோர் தலைமையில் பல்லக்காபாளையம் கிராமத்தில் நடைபெற் றது. மாவட்ட துணைச்செயலாளர் முருகேசன் துவக்கவுரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் குருசாமி அறிக்கையை முன்வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், விசைத்தறி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், பனைமரம் ஏறும் தொழி லாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி ஆக.19 ஆம் தேதியன்று குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொ டர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலைவராக வி.சண்முகம், செய லாளராக ஆர்.கோவிந்தசாமி, பொருளாளராக சி.சண்முகம் உட்பட 21 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் மாநில உதவித்தலைவர் சி.துரைசாமி நிறைவுரை யாற்றினார்.