ரேசன் கடை பொருட்கள் பதுக்கல் 7 மாதங்களில் 6272 பேர் கைது
நாமக்கல், ஆக.2- பொது விநியோகத் திட்ட பொருட்களை பதுக்கி விற் றதாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்க ளில் 6272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசி யப் பண்டங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களை சிலர் முறை கேடாக வாங்கி கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். அதைத்தடுக்கும் நோக்கில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த ஜன.1 முதல் ஜூலை 31 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் மொத்தம் 6025 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 2342 டன் பொது விநியோகத் திட்ட அரிசி, 13,720 லிட்டர் மண்ணெண்ணெய், 1725 சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் அத்தியாவசியப் பண் டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1,84,41,328 ஆகும். இதுதொடர்பாக 6,272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு, விற்பனைக்கு பயன்படுத்திய 1,362 வாகனங்கள் பறிமு தல் செய்யப்பட்டுள்ளன. 2880 வாகனங்கள், அபராதத் தொகை செலுத்தியப்பிறகு விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண் டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 70 பேர் குண் டர் தடுப்புச்சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, நாமக் கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசல் போட்டிக்கு தடை
நாமக்கல், ஆக.2- வெள்ளப்பெருக்கு காரணமாக பரமத்திவேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக் குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழி படுவது வழக்கம். அதைத்தொடர்ந்து மீனவர் சங்கத் தால் பரிசல் போட்டியும் நடத்தப்படும். இந்நிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாது காப்பு காரணங்களுக்காக பரிசல் போட்டிக்கு போலீ சார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா கூறு கையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால் ஆடி 18 பண்டிகையான ஞாயிறன்று (இன்று) பொது மக்கள் பரமத்திவேலூர் வட்டத்தில் காவிரியில் குளிக்க வும், கோவில்களின் பொருள்களை சுத்தம் செய்து வழி பாடு நடத்தவும், பரிசல் போட்டிக்கும் தடை விதிக் கப்படுகிறது. அதேபோல, காவிரி ஆற்றில் பல நூற் றாண்டுகளாக விடப்படும் வழக்கமான மோட்ச தீபம் மட்டும் விடப்படும். ஆனால், காவிரி கரைக்கு வந்து காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை. காவிரி பாலத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப் படும், என்றார்.
கொலை முயற்சி வழக்கில், 5 சிறுவர்களுக்கு சிறை தண்டனை
கோவை, ஆக.2- கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, உடையாம்பாளையம் வஉ சிதம்பரனார் வாசக சாலை, காமராஜர் காலனி அருகே, கடந்த 2024 ஆம் ஆண்டு காந்தி மாநகர் மற்றும் செளரிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மோதிக் கொண்டனர். அப்பகுதியைச் சேர்ந்த செல்வபெருமாள் தடுத்து தக ராறை விலக்கிவிட்டார். இதில் ஆத்திமடைந்த சில சிறு வர்கள், கத்தி மற்றும் அரிவாளால் செல்வபெருமாளை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து பீளமேடு காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, செளரிபாளையத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேரைக் கைது செய்தனர். இவர்கள் 5 பேர் மீதும் 4 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. கொலை முயற்சி வழக்கு தொடர்பான விசா ரணை கோவை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் குமார், சிறுவர்கள் 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், அவர்களை செங்கல்பட்டிலுள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.
ரூ.2.32 கோடியில் கல்விக்கடன் வழங்கல்
கோவை, ஆக.2- கோவையில் சனியன்று நடைபெற்ற கல்விக்கடன் மேளாவில், 22 மாணவர்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பீட் டில் கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத் தில் சனியன்று, 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேரும் மாண வர்களுக்கான கல்விக்கடன் மேளா நடைபெற்றது. நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இந் நிகழ்வில், 16 முன்னணி வங்கிகள் பங்கேற்றன. கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கும் பொருட்டு 20 கல்லூரி கள் கலந்து கொண்டன. இம்மேளாவில் 22 மாணக் கர்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் உத விகள் வழங்கப்பட்டன. மேலும், 2024 – 2025 கல்வி யாண்டில் கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி படித்து அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் நீலகிரி மருத்துவக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவன் ராஜேஷ்-க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்துஉபரிநீர் திறப்பு நிறுத்தம்