சேலம் சரகத்தில் 24 காவல் நிலையங்கள் தரம் உயர்வு
சேலம், ஆக.6- சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 24 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான 280 சர்க்கிள் காவல் நிலையங்கள், ஆய்வாளர் நிலைக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளன. அதன்படி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய 4 மாவட்டங்களில் 24 சர்க்கிள் காவல் நிலையங் கள் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கெங்க வல்லி, நங்கவள்ளி, பூலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, தொள சம்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களும், நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம், மல்லசமுத்திரம், வாழவந்திநாடு, மொளசி, வெப்படை ஆகிய 6 காவல் நிலையங்களும் ஆய்வாளர் நிலைக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளது. இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணா புரம், பொம்மிடி, இந்தூர், மகேந்திரமங்கலம், ஏ.பள்ளிப்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திகுப்பம், நாகரசம்பட்டி, சிப்காட், பேரிகை, தளி, வேப்பன ஹள்ளி, கெலமங்கலம், உத்தரனப்பள்ளி உள்ளிட்ட 8 காவல் நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான காவல் ஆய்வாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப் பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை விற்க முயன்ற பெண் கைது
கோவை, ஆக.6- கோவையில் 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயன்றயதாக பெண் ஒருவர் கைது செய் யப்பட்டார். குழந்தையை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர், பந்தய சாலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி யைச் சேர்ந்த பிரகாஷ் - விஜயசாந்தி தம்ப திக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தை கள் உள்ளனர். கடந்த மாதம் 26-ஆம் தேதி, இவர்களுக்கு நான்காவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால், நான்காவது குழந்தையைத் தத்துக்கொடுக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவம னையில் விஜயசாந்திக்கு அறிமுகமான சிந்து (32) என்பவர், குழந்தையை தத்துக் கொடுக்க உதவுவதாகக்கூறி, குழந்தையை வாங்கிக்கொண்டு சோமனூருக்குச் சென் றுள்ளார். ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்க முயன்றபோது, சைல்டு லைன் அமைப் பினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாகச் செயல்பட்ட சைல்டு லைன் அமைப்பினர், குழந்தையை மீட்டதுடன், சிந்துவைப் பிடித்து பந்தயசாலை காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிந்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையின் பெற்றோருக்கும் இந்த விற்பனையில் தொடர்பு உள்ளதா அல்லது சிந்து பெற்றோரை ஏமாற்றி குழந்தையை விற்க முயன்றாரா? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை காப்ப கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொப்பூர் கணவாயில் லாரி விபத்து
தருமபுரி, ஆக.6- பெங்களூருவிலிருந்து கோவை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, தொப்பூர் கண வாய் பகுதியில் விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து கேஸ் அடுப்பை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி, கோவையை நோக்கி சென்று கொண்டிருந் தது. இந்த லாரியை விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்த தனசேகர் (32) என்பவர் ஓட்டி வந்தார். தருமபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாயன்று வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து, காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி, பள்ளத்தில் சாய்ந்து விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் 30அடி பள்ளத் தில் கன்டெய்னர் லாரி விழாமல் இருந்ததால், ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இவ் விபத்து குறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர், விபத்துக்குள்ளான லாரியை மீட்டு, விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவ முகாம்
சேலம், ஆக.6- சேலம் மாவட்டத்தில் 11 ஆவது தேசிய கைத்தறி தினம் மற்றும் சர்வதேச கூட் டுறவு ஆண்டு - 2025 முன் னிட்டு, கைத்தறி நெசவாளர் களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழ னன்று (இன்று) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. வனவாசி ரங்கண்ணன் திரு மண மண்டபத்தில் நடைபெ றும் இம்முகாமில், இருதய நோய், கண், ரத்த அழுத்தம் போன்ற பொது மருத்துவ பரிசோதனை மற்றும் பொது சுகாதாரம், மகளிர் சுகாதா ரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோ சனைகள் வழங்கப்படவுள் ளதென மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித் துள்ளார்.