tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பராமரிப்பு இல்ல குழந்தைகளுக்கு 210 மருத்துவ காப்பீடு அட்டை

திருப்பூர், செப்.13- திருப்பூரில் பராமரிப்பு இல்லத்தில் தங்கி பயின்று வரும்  210 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப் பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தை கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கி பயின்று வரும் குழந்தைக ளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை  வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனியன்று நடைபெற்றது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல மைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் நடை பெற்ற இந்த சிறப்பு முகாமில் திருப்பூரில் உள்ள 11 பராமரிப்பு  இல்லங்களில் இருந்து குழந்தைகள் வந்திருந்தனர். இவர்க ளுக்கு காப்பீட்டு திட்டத்திற்கான பதிவு மேற்கொள்ளப்பட் டது. மேலும், குழந்தைகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்து உடனுக்குடன் அவர்களுக்கான காப் பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் 210 பேர் பங்கேற்று  பதிவு செய்து மருத்துவ காப்பீடு அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.

போக்குவரத்து மாற்றம் ஒத்திவைப்பு

திருப்பூர், செப்.13- திருப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற் றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் சனிக்கிழமை முதல் மாற்றுப்பாதை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  திருப்பூர் நகரின் வளர்மதி பாலம் அருகே சுரங்கப்பாதை பணி யைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுமையடையவில்லை. மாற்றுப்பாதை பணி கள் முழுமையாக நிறைவடைந்த பிறகு மற்றொரு நாளில்  சோதனை ஓட்டம் நடத்தப்படும். இது குறித்து பின்னர் அறி விக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

செல்போன் பறிக்க முயற்சி:  3  பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர், செப்.13- திருப்பூரில் மிரட்டி மொபைல் போனை பறிக்க முயன்ற  மூன்று பேர் மீதி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் ஏராள மான வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இச்சூழ லில், ஒடிசாவை சேர்ந்த ராகுல் (21) என்பவர், இங்கு தங்கி  பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று இரவு வீட்டுக்கு வெளியே  அமர்ந்திருந்த இவரிடம், அவ்வழியாக வந்த சபரி(20) என்ப வர் மிரட்டி மொபைல் போனை பறிக்க முயன்றுள்ளார். ராகுல்  சுதாகரித்துக் கொண்டு மொபைல் போனை தராமல் மறுத்துள் ளார். வீட்டிற்கு சென்ற சபரி தனது சகோதரர் திலீப் மற்றும்  16 வயது சிறுவன் உள்ளிட்டோருடன் பேட், ரம்பம் உள்ளிட் டவை எடுத்து வந்து தாக்கியுள்ளார். தாக்கியவர்களின் தயார்  சம்பவ இடத்துக்கு சென்று, சமாதனப்படுத்தி 3 பேரையும் அழைத்து சென்றுள்ளார். இந்த காணொளி சமூக வலைத ளத்தில் பரவியது. இதுகுறித்து புகாரின் பேரில், 16 வயது  சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.'

பாளையக்காரார்களின் ஆட்சி முறையை விளக்கும் வீர கம்பங்கள்

உடுமலை, செப்.13- உடுமலை பகுதியில் ஆட்சி செய்த பாளை யக்காரார்களின் வாழ்க்கை மற்றும் போர்  வெற்றிகளை குறிக்கும் வகையில் இப்பகுதி யில் அதிகமான வீர கம்பங்கள் உள்ளன. இந்த  கம்பங்களை இன்றும் அனைத்து மக்களும் வழிபட்டு வருகின்றனர். உடுமலை  மைவாடி பாளையக்காரர்கள் வழிபட்ட வீரகம்பம் இன்றும் உள்ளன. இங்கு  நான்கடி உயரத்தில் இரண்டும், மூன்றடி உய ரத்தில் ஒன்றும் என மூன்று கம்பங்கள் உள் ளன. கம்பத்தின் மேல் சூரியன், சந்திரனைக்  குறிக்கும் சிற்பங்களும் உள்ளன. அதற்குக்  கீழே வில் அம்புடன் நான்கு மனித உருவங் கள் இருக்கும் சிற்பமும், அதற்கு அருகில் புலியை அடக்கும் வகையில் ஒரு சிற்பமும், அதற்கு அருகில் கால்நடைகளுடன் ஒரு  சிற்பமும் இருக்கின்றன. மேலும் போருக்குச்  செல்வது போன்றும், போரில் இறந்தவர்கள்,  மாடுகளுடனும், குதிரைகளுடனும் பயணம்  செய்யும் சிற்பங்களும் உள்ளன. அதில் ஒரு புடைப்புச்சிற்பத்தில் வில் அம்புகளுடன் மூன்று ஆடவர்கள் செல்வது போன்றும், அவர்களுடன் ஒரு பெண்ணும் செல்வது அக்காலத்தில் பெண்களும் போருக்குச் சென்றதை உறுதி செய்கிறது.  இது 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் பாளை யக்காரர்களால் உருவாக்கப்பட்ட சிலைக ளாகும். இதற்கு சான்றாக இதன் அருகில்  வழிபடும் நிலையில் ஒரு ஆண் சிற்பமும்  (அரசனும்), அதற்கு அருகில் ஆண் சிற்பமும்  (சிறிய வாரிசும்) இருக்கும் புடைப்புச் சிற்பம்  மூன்றடி உயரத்திலும், இரண்டு அடி அகலத்திலும் இருக்கிறது. இவர்களின் தலை யில் தலைப்பாகையும், இடையில் குறுவா ளும், ஆபரணங்களுடன் காட்சி அளிக்கின் றன. இது பாளையக்காரர்கள் காலத்து சிற்பங் கள் என தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த் தீஸ்வரி உறுதி செய்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த இடத்தில் பெரிய அளவில் போர்  நடந்ததாகவும், அந்தப்போரில் பாளையக்கா ரர்கள் இறந்துவிட்டதாகவும், இறந்து போன  வீரர்களைத் தம் முன்னோர்களாக, தம் இனத் திற்கான தலைவர்களாக பொதுமக்கள் வட்டார வழக்கில் வழிபாடு செய்து வருகின்ற னர் என்றார். இந்த கள ஆய்வில் உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தின் வி.கே.சிவகுமார், அருள்செல்வன், பாலகிருஷ்ணன் ஆகி யோர் உடனிருந்தார்கள்.