tamilnadu

img

நீர்த்தேக்கப் பகுதியில் விடப்பட்ட 15 லட்சம் மீன் குஞ்சுகள்

நீர்த்தேக்கப் பகுதியில் விடப்பட்ட15 லட்சம் மீன் குஞ்சுகள்

மேட்டுப்பாளையம், செப்.16- மீன் வளர்ப்புக்காக அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 15 லட்சம் கட்லா, ரோகு மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கமும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு சங்கமும் இணைந்து பவானி சாகர் அணையில் மீன் பிடிப்புப்பணிக்காக குத்தகை எடுத் துள்ளது. இரண்டு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கட்லா ரோகு மீன் குஞ்சுகள் ஆந்திர மாநிலத்திலிருந்து போதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கண்டெய்னர் லாரியில் சிறு முகை அடுத்துள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகு திக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் சுமார் 15 லட்சம் கட்லா,  ரோகு மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் விடப்பட்டன. அடைபட்டிருந்த மீன் குஞ்சுகள் அணையின் நீர்த் தேக்க தண்ணீரில் விடப்பட்டதும் துள்ளி குதித்து நீந்தி சென்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர் ஆனந்தி, மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலை வர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.