tamilnadu

img

தோழர் பி.ராமமூர்த்தி 13ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

தோழர் பி.ராமமூர்த்தி 13ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், செப்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில முன்னாள் பொருளாள ருமான தோழர் பி.ராமமூர்த்தியின் 13ஆம் ஆண்டு நினைவு  தினம் தியாகி பழனிசாமி நிலையத்தில் திங்களன்று கடைப் பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக தோழர்  பி.ராமமூர்த்தி உருவப்படம் வைக்கப்பட்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன்,  இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர்  அகமது ஆகியோர் நினைவு கூர்ந்து பேசினர். இதில், கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மாநிலக்  உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி  உள்பட சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.