tamilnadu

img

முகிலனுக்கு 15 நாள் காவல்: திருச்சி சிறையில் அடைப்பு

கரூர்
கரூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் முகிலனை ஆஜர்படுத்திய போலீசார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன்(52). சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். மேலும் கூடங்குளம் அணுமின் உலை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை கைதானவர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இவர் கடந்த பிப்.14ம்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான வீடியோவை சென்னையில் வெளியிட்டார். பின்னர் மறுநாள் எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவரை அதன் பின்னர் காணவில்லை. 

இதனால் ஆலைகள் சம்பந்தப்பட்ட  யாரோ முகிலனை கடத்திச் சென்றுவிட்டதாக தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலாமணி எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுமுகிலனை போலீசார் தேடிவந்தனர்.இந்நிலையில் 142 நாட்களுக்கு பிறகு முகிலன் திருப்பதியில் கடந்த7ம் தேதி மீட்கப்பட்டார். பின்னர் அவரை காட்பாடி ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் மார்ச் 30ம்தேதி முகிலன் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்தபாலியல் புகாரையடுத்து பாலியல் புகார் வழக்கில் அவரை கைதுசெய்தனர். முகிலனை சென்னை சிபிசிஐடி போலீசார் செவ்வாய்க்கிழமை மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு ஏ.எம்.ரவி முன் ஆஜர்படுத்தினர்.  அப்போது பாலியல் வழக்கு கரூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 24 மணி நேரத்திற்குள் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டார். 

இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் முகிலனை பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு நள்ளிரவு 2 மணியளவில் அழைத்து வந்தனர்.முன்னதாக முகிலன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதை அறிந்தஅவரது ஆதரவாளர்கள், காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் உள்ளிட்டோர் நள்ளிரவில் நீதிமன்றத்தை நோக்கி வந்தனர். மேலும் அவரதுமனைவி பூங்கொடியும் வந்திருந்தார்.அப்போது கரூர் மாவட்ட போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் இருந்து சுமார் 100மீ. தொலை
வில் நீதிமன்றத்திற்குள் யாரும்செல்லாதவாறு தடுப்பு வேலி அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் பத்திரிகைகாரர்களையும் நீதிமன்றத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பத்திரிகைகாரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முகிலனை போலீசார் வேனில் பலத்த பாதுகாப்புடன் கரூர் ஜேஎம்-2 நீதிபதிவிஜய்கார்த்திக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முகிலனை 15 நாட்களில் காவலில் வைக்குமா
றும், மீண்டும் வரும் 24ம் தேதி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.கரூர் நீதிமன்றத்திற்கு ஆஜராக முகிலனை அழைத்து வந்தபோது, அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டார்.

கரூர் நீதிமன்றத்தில் முகிலனை சந்திக்க வந்த அவரது மனைவி பூங்கொடி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் எந்த தவறும் செய்யவில்லை,  என் கணவர் மீது திட்டமிட்டு அரசாங்கமும், ஆலை நிர்வாகமும் பழிபோட்டதாகவே நினைக்கிறேன். அவரை எங்கேயோ அடைத்து வைத்து அவர் வெளியிட்ட ஸ்டெர்லைட் சி.டி. பற்றி தெளிவாக கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவேஇன்னொரு சி.டி.யும் வெளியிடுவதாக சொன்னார். அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருப்பதால் அதுவெளிவந்தால் மொத்த அரசாங்கத்துக்கும் பிரச்சனை என்பதால் ஆதாரங்களை வாங்குவதற்காக இருட்டறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். நாயை விட்டு கடிக்க விட்டிருக்கிறார்கள். முதலுதவி சிகிச்சை கூடஅளிக்கவில்லை. என்னை அவரிடம்தனியாக பேசக் கூட அனுமதிக்கவில்லை. சட்ட ரீதியாக என்ன நடவடிக்கையோ, அதை எடுப்போம் என்று கூறினார்.

;