tamilnadu

முகக்கவசம் அணியாமல் வந்தால் சிறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சேலம், மே 30- சேலம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தால்  காவல் துறையின் மூலம் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ்  நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள் ்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் கூடுவதை தடுத்திடவும் இந்நோய் தொற்று பரவாமல் பாதுகாத்திடவும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு அதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள் ளிட்ட பல்வேறு பணிகள் சமூக இடைவெளியினை கடை பிடித்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தான்  முகக்கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவ வல்லு நர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்க ளின் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து  வெளியே வருபவர்கள் மற்றும் கடைகள், வணிக நிறுவ னங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிப வர்கள், அனைத்து வகையான அலுவலகங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  

அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறி யப்பட்டால் அந்நபர்கள் முதல் முறையாக இருந்தால் ரூ.100 அபராதமும், அதே நபர் இரண்டாம் முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதமும், அதே நபர் மூன்றாம் முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் 1897, தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2ன் படி அவரை காவல் துறையின் மூலம் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் எச்சரித்துள்ளார்.