வாஷிங்டன்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாறாக ஆன்லைன் வகுப்பு மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஓக்லாந்து பகுதியைச் சேர்ந்த கிரேஸ் என்றார் கறுப்பின மாணவி ஆன்லைன் வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரித்த நீதிமன்றம் முந்தைய குற்றச்சாட்டுகளையும் (?) சேர்த்து, கிரேசின் செயல் சமூகத்திற்கான அச்சுறுத்தல் ஆனது எனக்கூறி அவரை சிறையில் அடைக்க நீதிபதி மேரி எல்லன் உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில் கிரேஸுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் காரணமாக மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.